பாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

டிஜிட்டல் மீடியா நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் ட்விட்டர் (மற்றவற்றுடன்) அடங்கிய கூட்டணி, சமூக ஊடகங்களுக்காக பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக சேர்ந்துள்ளன. இந்த விதிகள் திருத்தப்படாவிட்டால், நாட்டில் சேவைகளை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது மீண்டும் பாகிஸ்தான் தனது முடிவினை, அதாவது இந்த இணைய விதிகளை மாற்றாவிட்டால் கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

புதிய விதிகளில் திருத்தம் வேண்டும்

புதிய விதிகளில் திருத்தம் வேண்டும்

சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், ஆசிய இணைய கூட்டணி சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளையும் விதிகளையும் திருத்துமாறு தனது அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்ததாக கூறியிருந்தார். அந்த கடிதத்தில் புதிய விதிகள் AIC உறுப்பினர்கள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும் வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்கும் என்று கூறப்பட்டது.

என்னென்ன விதிமுறைகள்?

என்னென்ன விதிமுறைகள்?

அதுமட்டும் அல்ல இந்த புதிய விதிமுறைகளின் படி சமூக ஊடக நிறுவனங்கள், இஸ்லாமாபாத்தில் அலுவலகங்களைத் திறப்பது, தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை உருவாக்குவது மற்றும் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கத்தை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பலவற்றை கட்டாயமாக்குகின்றது.

கடும் அபராதம் உண்டு
 

கடும் அபராதம் உண்டு

பாகிஸ்தானின் இந்த புதிய விதிமுறைகளை, சமூக வலைதள நிறுவனங்கள் ஏற்க தவறினால் கடும் அபராதம் மற்றும் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆனால் நிறுவனங்களோ இந்த விதிகளை தெளிவற்ற ஒன்று. மேலும் இது பயனர்களின் தனியுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக சமூக வலைதள நிறுவனங்கள் கூறியுள்ளன.

இணைய பொருளாதாரத்தினை பறிக்கும்

இணைய பொருளாதாரத்தினை பறிக்கும்

பாகிஸ்தானின் இந்த புதிய விதிகளை இணங்க தவரும் பட்சத்தில் நிறுவனங்கள் 3.14 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆக இதனால் தான் சமூக வலைதள நிறுவனங்கள் பாகிஸ்தானிடம் இந்த புதிய விதிமுறைகளில் மாற்றம் செய்ய கோருகின்றன. இந்த நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று விதிகள் தளர்த்தப்படுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook, Twitter and Google threaten to leave Pakistan over new rules

Pakistan updates.. Facebook, Twitter and Google threaten to leave Pakistan over new rules
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X