பழைய ரூ.10, 5 ரூபாய் நாணயங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்குமா.. உண்மை நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில நாட்களாக பழைய 10 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களுக்கு நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் பணம் கிடைக்கும் என்ற செய்தி வைரலாக பரவி வருகின்றது.

 

இது உண்மையா? உண்மை நிலவரம் தான் என்ன வாருங்கள் பார்க்கலாம். உண்மையில் பழைய நாணயங்களுக்கு என்று மதிப்பு உண்டு. ஆனால் அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு.

பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா.. இதனை தெரிஞ்சுக்கோங்க..!

தற்போது வைரலாகி வரும் இந்த தகவலில் மாதா வைஷ்னோ தேவியின் படம் உள்ள 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை நீங்கள் வைத்திருந்தால், அவற்றை ஏலத்தில் விடுவதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது தான்.

லட்சக் கணக்கில் விற்பனையா?

லட்சக் கணக்கில் விற்பனையா?

மேலும் மேற்கண்ட இந்த நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால் இந்த நாணயங்கள் லட்சக் கணக்கில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு பழைய ஐந்து ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிலும் சில நிபந்தனைகள் உண்டு. அது அந்த நோட்டில் டிராக்டரின் படம் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.

1 ரூபாய்க்கு - 45,000 ரூபாய்

1 ரூபாய்க்கு - 45,000 ரூபாய்

மேலும் அந்த நோட்டில் 786 என்ற எண் இருந்தாலும் நல்ல தொகையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் காயின்பஜார் தளத்தில் 1 ரூபாய்க்கு நீங்கள் 45,000 ரூபாய் வரை பெற முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. அதில் 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு வெளியிட்ட 1 ரூபாய் தாளுக்கு 45,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.

நிபந்தனைகள் உண்டு
 

நிபந்தனைகள் உண்டு

எனினும் இதற்கு சில கன்டிசன்களும் உண்டு. ஒன்று இந்த ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம் பட்டேலின் கையெழுத்து இருக்க வேண்டும். அதே வரிசை எண் 123456 என்ற வரிசை எண் இருக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ளுங்கள்

கவனத்தில் கொள்ளுங்கள்

ஆக பழைய நாணயங்களுக்கு நீங்கள் ஒரு தொகையை சம்பாதிக்க முடியும். எனினும் இதற்காக சில நிபந்தனைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு நாணயங்களும் லட்சக்கணக்கில் விலை போகும் என்பது தவறான விஷயம். மேற்கண்ட நிபந்தனைகளுடன் பொருந்தினால் உங்களது நாணயங்கள் நல்ல விலைக்கு போகலாம். இதற்காக காயின் பஜார், இந்தியா மார்ட் உள்ளிட்ட பல தளங்கள் ஏலம் விடுகின்றன. அதில் உங்களது நாணயங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். இது குறித்து நாம் ஏற்கனவே https://tamil.goodreturns.in/news/old-is-gold-one-rupee-note-bundle-now-worth-rs-45-000-check-full-details-here/articlecontent-pf118963-023536.html என்ற கட்டுரையிலும் பார்த்திருந்தோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee india ரூபாய்
English summary

Fact check! You can earn more money by selling your old Rs.10, 5 coin, but some conditions apply

Rupee lartest updates.. Fact check! You can earn more money by selling your old Rs.10, 5 coin, but some conditions apply
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X