டிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது? என்ன ஆவணங்கள் தேவை? #Fastag

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டிசம்பர் 1ம் தேதி முதல், FASTags இல்லாத வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டோல்கேட்டுகளில் பணத்தை செலுத்தி நுழைவு கட்டணம் செலுத்தும்போது, வாகனங்கள் சில நிமிடங்கள் காத்திருக்க தேவையுள்ளது. பண்டிகை காலங்களில் ஊருக்கு சென்று திரும்புவோரால், டோல்கேட்டுகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

இதை தவிர்க்கத்தான், பாஸ்ட்டேக் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஷோரூம்களில் விற்பனையாகும்போதே, அனைத்து வாகனங்களிலும் FASTags ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதை ரீசார்ஜ் செய்யாமல், மறுபடியும், டோல்கேட்டுகளில், பணம் செலுத்தி வரும் வாகன ஓட்டிகள்தான் அதிகம்.

FASTag இல்லையா..? 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..!FASTag இல்லையா..? 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..!

இரட்டிப்பு கட்டணம்

இரட்டிப்பு கட்டணம்

இந்த நிலையில்தான், FASTags நடைமுறையை கட்டாயப்படுத்த மத்திய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், FASTags மூலமாக பணம் செலுத்தாமல், ரொக்க பரிமாற்றம் செய்தால், இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. சில டோல்கேட்டுகளில் ஒரு சில பாதைகளில்தான், FASTags வசதி உள்ளது. எனவே, அனைத்து டோல்கேட்டுகளுமே, அனைத்து பாதைகளிலும் பாஸ்ட்டேக் வசதியை செயல்படுத்த நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதிக்குள் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

டிசம்பர் 1

டிசம்பர் 1

ஒருபக்கம், வாகன உரிமையாளர்கள், FASTags பொருத்துவதை கட்டாயமாக்கும் அதே நேரத்தில், மற்றொரு பக்கம் டோல்கேட்டுகளில் அனைத்து வழிகளிலும் பாஸ்ட்டேக் வசதியும் கட்டாயமாகும். இவை அனைத்தும் டிசம்பர்1ம் தேதிக்குள் நடைபெறும் என்கிறார் நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி ஒருவர். " FASTags வசதி இல்லாமல், டோல்கேட்டை கடந்தால் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும்" என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாக முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

பாஸ்டேக்கை எவ்வாறு பெறுவது?

பாஸ்டேக்கை எவ்வாறு பெறுவது?

உங்கள் வாகனத்திற்கு பாஸ்டேக் வாங்குவது மிகவும் எளிதானது. புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, NHAI டோல் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இடங்களில் ஏதேனும் ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம். அல்லது, NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம். தற்போது, ​​இந்த பட்டியலில் சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை உள்ளன. Paytm மூலமும் FASTag ஐ வாங்கலாம்.

FASTag ஐ வாங்க என்ன ஆவணங்கள் தேவை?

FASTag ஐ வாங்க என்ன ஆவணங்கள் தேவை?

நீங்கள் பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பகுதியில், பாஸ்டேக் வாங்குகிறீர்கள் என்றால், பின்வரும் ஆவணங்களின் நகலுடன் ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்காக இந்த ஆவணங்களின் அசல் நகலையும் கொண்டு செல்ல வேண்டும்.

1: வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி)

2. வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

3. KYC ஆவணங்கள் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை)

தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால் மேற்கண்ட தேவைப்படும், ஆவணங்கள் வேறுபடலாம். உங்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதை முதலிலேயே, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதால் நன்மைகள்

பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதால் நன்மைகள்

பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது டோல் பிளாசாக்கள் வழியாக சீராக, வேகமாக செல்ல அனுமதிக்கிறது. பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்பதால் பணம் செலுத்துவதில் எளிமை உள்ளது. வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தால், இது காற்று, மாசுபாட்டைக் குறைக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரசீதுகளை வழங்க டோல் பிளாசாக்கள் தேவையில்லை என்பதால், இது காகிதப் பயன்பாட்டையும் குறைக்கிறது. இவை அனைத்தையும் தவிர, பாஸ்டேக், கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் போன்ற சலுகைகளையும் வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FASTag compulsory from December 1, or toll will be double

Starting December 1st, all four-wheelers in India must have FASTag RFID stickers affixed on their windscreen for making payments at NHAI toll plazas across India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X