வருமான வரி தாக்கல் செய்தால் ராயல் என்பீல்ட் பைக் பரிசு.. 1 லட்சம் வரையில் கமிஷன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில், பல லட்சம் பேர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

 

ஒருபக்கம் வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக இருக்கும் நிலையில், மறுபுறம் வருமான வரித்துறை மீண்டும் வருமான வரி செலுத்த கால நீட்டிப்பு செய்யும் எனக் கணிப்பு உலா வருகிறது. இந்த நிலையை மாற்ற பொதுச் சேவை மையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 ராயல் என்பீல்ட் பைக்

ராயல் என்பீல்ட் பைக்

Common Service Centre (CSC) அமைப்பு கிராம அளவில் இருக்கும் தொழிலதிபர்களுக்குப் புதிய ராயல் என்பீல்ட் பைக் வெல்லும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

ஆம் எப்போதும் இல்லாமல் வகையில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கப் பொதுச் சேவை அமைப்பு (CSC) 1000 பேருக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செலுத்தும் கிராம அளவு தொழிலதிபர்களுக்கு ராயல் என்பீல்டு பைக் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

 CSC அமைப்பு

CSC அமைப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்க CSC அமைப்பு 1000 வருமான வரி தாக்கல் செய்வது மூலம் கிராம அளவு தொழிலதிபர்கள் 1 லட்சம் ரூபாய் அளவிலான கமிஷன் தொகையும் பெறும் வாய்ப்பு உள்ளது என டிவிட்டரில் தெரிவித்துள்ளது CSC அமைப்பு.

 மத்திய அரசு
 

மத்திய அரசு

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை CSC அமைப்பை நிர்வாகம் செய்கிறது. இந்த அமைப்பின் முக்கியப் பணி அரசின் இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவைகளை மக்களுககு கொண்டு சேர்ப்பது தான். இதற்காக CSC அமைப்பு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் village level entrepreneurs (VLEs) என்பவரை நியமிக்கும்.

இந்த VLE-க்கள் தான் கிராமத்தில் இருக்கும் மக்களுக்குச் சேவையை அளிக்கும் மைய புள்ளியாக இருப்பார்கள்.

 1 லட்சம் ரூபாய் கமிஷன்

1 லட்சம் ரூபாய் கமிஷன்

தற்போது CSC அமைப்பு வெளியிட்டுள்ள ராயல் என்பீல்டு மற்றும் 1 லட்சம் ரூபாய் வரையிலான கமிஷன் மூலம் வருமான வரி தாக்கல் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு வருமான வரி சலுகைகளை முழுமையாகக் கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

 வருமான வரித்துறை

வருமான வரித்துறை

வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவின் படி 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 5.95 கோடி பேர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளதாக ஜனவரி 11, 2021ல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிசம்பர் 15, 2021ஆம் தேதி படி 2020-21 நிதியாண்டுக்கு 3.59 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

 தினமும் 6 லட்ச பேர்

தினமும் 6 லட்ச பேர்

மேலும் தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்து வருகின்றனர் என்றும், இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 டிசம்பர் 31 கடைசி நாள்

டிசம்பர் 31 கடைசி நாள்

இதன் மூலம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கடந்த ஆண்டின் எண்ணிக்கையை அடைவது மட்டும் அல்லாமல் 5.95 கோடி என்ற அளவீட்டை தாண்ட வேண்டும் என்ற இலக்கையும் கொண்டு உள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாகப் பலர் வருமானம் இல்லாமல் வருமான அளவு குறைந்துள்ள காரணத்தால் இந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

File ITR and win Royal Enfield Bullet; central govt's CSC new announcement

File ITR and win Royal Enfield Bullet; central govt's CSC new announcement வருமான வரி தாக்கல் செய்தால் ராயல் என்பீல்ட் பைக் பரிசு.. 1 லட்சம் வரையில் கமிஷன்..!
Story first published: Saturday, December 25, 2021, 17:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X