இந்தியா ஜிடிபி: நிதி பற்றாக்குறை 21.3% அடைந்தது , உற்பத்தி துறை 9.4% வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரச் சிறப்பான வளர்ச்சியை அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

 

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ரெயூட்டர்ஸ் தளம் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும், எஸ்பிஐ வங்கியின் ECOWRAP அறிக்கையில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும், ரிசர்வ் வங்கி 21.4 சதவீதமாக இருக்கும் எனவும், இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் 9.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் 8 முக்கியத் துறையின் உற்பத்தி அளவீடுகள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்தபடியே 20.1 சதவீதம் என்ற வரலாற்று உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு 2 முறை நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தும் 2019-20ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டு அளவீட்டை இன்னமும் அடையவில்லை என்பது தான் தற்போது வருத்தமான செய்தியாக உள்ளது.

நிதிப் பற்றாக்குறை அளவு

நிதிப் பற்றாக்குறை அளவு

இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையின் மொத்த அளவீட்டில் ஜூன் காலாண்டு முடிவில் 21.3 சதவீதத்தை அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவீடு 3.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மொத்த நிதியாண்டின் அளவில் 21.3 சதவீதம்.

மொத்த வரி வருமானம்
 

மொத்த வரி வருமானம்

இதேபோல் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த வரி வருமானத்தின் அளவு சுமார் 5.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் மொத்த செலவுகளின் அளவு 10.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜிடிபி அளவில் 6.8 சதவீதம்

ஜிடிபி அளவில் 6.8 சதவீதம்

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவு மொத்த ஜிடிபி அளவில் 6.8 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதத்தில் 21.34 சதவீதத்தை அடைந்துள்ளது.

வரி வருமானம் அதிகரிப்பு

வரி வருமானம் அதிகரிப்பு

நிதி பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் இதர பிரிவுகளில் இருந்து கிடைக்கும் வரி வருமானம் அதிகரித்துள்ள காரணத்தால் இதைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி திரட்டல் திட்டம்

நிதி திரட்டல் திட்டம்

இதேவேளையில் ஏர் இந்தியா, எல்ஐசி, மற்றும் தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் திரட்டப்படும் நிதி மூலம் உபரி நிதி அதிகமாகவே இருக்கும் அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையும் எனக் கணிக்கப்படுகிறது.

8 முக்கிய உற்பத்தி துறை

8 முக்கிய உற்பத்தி துறை

இதைத் தொடர்ந்து நாட்டின் 8 முக்கிய உற்பத்தித் துறையின் உற்பத்தி ஜூலை மாதத்தில் 9.4 சதவீதம் வளர்ச்சி அசைந்துள்ளது. லோ பேஸ் எபக்ட் வாயிலாகக் கடந்த வருடத்தை விடவும் சிறப்பான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது.

2வது கொரோனா தொற்று அலை

2வது கொரோனா தொற்று அலை

2வது கொரோனா தொற்று அலையில் தாக்கம் குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் குறைந்துள்ள காரணத்தாலும், நாட்டில் டிமாண்ட் சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ள காரணத்தாலும் இந்தியாவின் முக்கியமான 8 உற்பத்தி துறைகளில் 7 துறைகள் வளர்ச்சியில் உள்ளது.

கட்டுமான துறை

கட்டுமான துறை

ஜூலை மாத தரவுகள் அடிப்படையில் மொத்த 8 உற்பத்தி துறைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி துறை மட்டுமே சரிவடைந்துள்ளது. இந்தியா முழுக்கக் கட்டுமான திட்டங்கள் வேகமெடுத்துள்ள நிலையில் சிமெண்ட் துறை 21.8 சதவீதமும், ஸ்டீல் துறை 9.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fiscal deficit for Q1 reaches 21.3%; July core sector output grows at 9.4%

Fiscal deficit for Q1 reaches 21.3%; July core sector output grows at 9.4%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X