பிளிப்கார்டின் Big saving day.. களைகட்ட போகும் விற்பனை திருவிழா.. வெறும் ரூ.1 புக் செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றாலே சலுகைகள், தள்ளுபடிகள், கேஸ்பேக் ஆஃபர்கள் தான். அதிலும் பிளிப்கார்ட் அமேசான் போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.

தற்போது முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் விற்பனை சலுகையான பிக் சேவிங்ஸ் டே விற்பனையை அறிவித்துள்ளது.

இந்த விற்பனை சலுகையானது அடுத்து வரும் செப்டம்பர் 18 முதல் தொடங்கவுள்ளது. இது செப்டம்பர் 18 தொடங்கி - செப்டம்பர் 20 வரை மட்டுமே நடத்தடப்பட உள்ளது. உண்மையில் இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

ரூ.1 க்கு புக் செய்யலாம்
 

ரூ.1 க்கு புக் செய்யலாம்

இந்த பிக் சேவிங் டேவில் ஏராளமான சலுகைகளை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. குறிப்பாக மொபைல், டேலெட்டுகள், டிவி மற்றும் உதிரி பாகங்கள், மற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் என பலவற்றையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதெல்லாவற்றையும் விட இந்த சலுகையினை பயன்படுத்தி பொருட்கள் வாங்க நினைப்பவர்கள், நீங்கள் வெறும் 1 ரூபாய் செலுத்தி புக் செய்து கொள்ளலாம்.

எப்போது வரை புக் செய்யலாம்

எப்போது வரை புக் செய்யலாம்

1 ரூபாயினை பயன்படுத்தி உங்களது ஆர்டர்களை நீங்கள் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 16 வரை புக் செய்து கொள்ளலாம். இதோடு எஸ்பிஐ கார்டு வழியாக பணம் செலுத்துபவர்கள் அல்லது இஎம்ஐ செலுத்துபவர்களுக்கு பலமான தள்ளுபடியையும் கிடைக்குமென பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

பல சலுகைகளும் உண்டு

பல சலுகைகளும் உண்டு

எனினும் இந்த பிக் சேவிங் டேவில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது என இந்த நிறுவனம் இது வரை பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் இந்த ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனம் மூலம் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், கார்டு அல்லது இஎம்ஐ, கார்டுலெஸ் கிரெடிட், எக்சேன்ஜ் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் சலுகைகளை பெறலாம் என அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்புகள்
 

எதிர்பார்ப்புகள்

எனினும் வயல்லெஸ் மவுஸ், கீபோர்டு, வவர் பேங்குகள், ஹெட்போன்கள், ஸ்மார்ட்பை தயாரிப்புகளின் கீழ் பலமான சலுகைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக எஸ்பியை கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் 10% கூடுதலாக சலுகையினை பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart announced big saving day from September 18, book items at Rs.1

Leading E-commerce giant flipkart announced big saving day from September 18, also we pre-book items at Rs.1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X