பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையொட்டி இ-காமர்ஸ் நிறுவனங்கள், இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் விழாக்கால சலுகையினை அறிவித்துள்ளன.

 

குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிக் பில்லியன் டே விற்பனையை அக்டோபர் 3 அன்று தொடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது அக்டோபர் 10 அன்று முடிவடையும் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக இது அக்டோபர் 7 அன்று தொடங்கி அக்டோபர் 12 வரையில் இருக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே மற்றொரு e-commerce ஜாம்பவானான அமேசான் நிறுவனம் அக்டோபர் 4 அன்று தனது கிரேட் இந்தியன் விற்பனையை தொடங்கும் என அறிவித்துள்ளது.

மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு...!

பலத்த சலுகைகள்

பலத்த சலுகைகள்

ஃபிளிப்கார்ட்-டின் இந்த பிக் பில்லியன் டே விற்பனையில் பலவிதமான சலுகைகள், தள்ளுபடிகள், கேஸ் பேக் சலுகைகள் என பலவற்றினையும் அறிவித்துள்ளது. இந்த சலுகையினை பல்வேறு பொருட்களுக்களுக்கு அறிவிப்புகளை கொடுத்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், கம்ப்யூட்டர், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு சலுகைகள் அளிக்கப்படலாம என தெரிகிறது.

உடனடி இன்ஸ்டன்ட் சலுகைகள்

உடனடி இன்ஸ்டன்ட் சலுகைகள்

மேலும் இந்த விழாக்கால சலுகையில் உடனடி டிஸ்கவுண்ட் ஆக 10% வரையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் கார்டுகளுக்கு சலுகையை அறிவித்துள்ளது. அதோடு கணிசமான கேஸ் பேக் சலுகையையும் அறிவித்துள்ளது. இது மொபைல் வாலட் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு என இரண்டுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

புதிய வகை ஸ்மார்ட்போன்கள்
 

புதிய வகை ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக இந்த விழாக்கால சலுகையில், மோட்டோரோலா, போகோ, ரியல்மீ, சாம்சங் மற்றும் விவோ உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளுக்கு இந்த சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னணி நிறுவனங்களின் புதிய வகை மாடல்களும் அறிமுகப்படுத்த இந்த விழாக்கால சலுகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

என்னென்ன போன்கள் அறிமுகம்

என்னென்ன போன்கள் அறிமுகம்

இந்த புதிய வகை அறிமுகத்தில் மோட்டோரோலா Edge 20 Pro, ஓப்போ Reno 6 Pro, ரியல் மீ Narzo 50 உள்ளிட்ட பல மாடல்களை இந்த விழாக்களை செய்ய தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதே போல ஸ்மார்ட்வாட்ச், பவர் பேங்க், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று முறை சிறப்பு சலுகைகள்

மூன்று முறை சிறப்பு சலுகைகள்

இதே போல ஸ்மார்ட்டிவிகளுக்கு 70% வரையில் தள்ளுபடி இருக்கும் எனவும், ஸ்மார்ட்பாய் மற்றும் மார்க் உள்ளிட்ட பொருட்களுக்கு 80% வரையில் தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது தவிர இந்த விழாக்கால விற்பனையை குதூகலப்படுத்தும் விதமாக, ஒரு நாளைக்கு மூன்று முறை சிறப்பு சலுகைகள் "rush hours" என்ற விற்பனையையும் அறிவித்துள்ளது.

அமேசான் சலுகைகள்

அமேசான் சலுகைகள்

அமேசானின் இந்த விழாக்கால விற்பனை சலுகைகளை ஒரு நாள் முன்னதாக பெற, பிரைம் மெம்பராகவும் இணைந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்கு வருடத்திற்கு கட்டணம் 999 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்காக அமேசான் பிரைம் தளத்தில் சென்று இணைந்து கொள்ளலாம்.

பல சலுகைகள்

பல சலுகைகள்

அமேசானும் இந்த விழாக்கால விற்பனையின் போது பலத்த சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.

மொத்தத்தில் இந்த விழாக்கால சலுகைகள் என்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart Big billion day’s sale dates changed to rival Amazon great Indian festival

Flipkart latest updates.. Flipkart Big billion day’s sale dates changed to rival Amazon great Indian festival
Story first published: Sunday, September 26, 2021, 19:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X