ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றாலே சலுகைகள், தள்ளுபடிகள் என்பது இல்லாமல் இருக்காது.
அந்த வகையில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான பிளிப்கார்ட், பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
பொதுவாக ஆன்லைன் ஈ- காமர்ஸ் வணிக நிறுவனங்கள் என்றாலே அவ்வப்போது சலுகைகளையும், ஆஃபர்களையும் வாரி வழங்கி வருகின்றன. அதெல்லாம் சரி தற்போது என்ன சலுகையெல்லாம் வழங்குகிறது? ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர் உண்டா? எவ்வளவு? என்னென்ன பிராண்டுகளுக்கு? என்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம்.

பிளிப்கார்டின் பிளாக் பிரைடே
அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிளாக் பிரைடே விற்பனையை இன்று தொடங்கியுள்ளது. இதில் வழக்கம்போல பல ஆஃபர்களையும் சலுகை மழையினையும் வாரி வழங்கி வருகின்றது. அதிலும் இந்த ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களின் சலுகை என்றாலே ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி சலுகை இருக்கும்.

என்னென்ன சலுகை?
குறிப்பாக ஜியோமி, ரியல்மி, ஒப்போ, சாம்சங், மற்றும் பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த சலுகையினை அறிவித்துள்ளது. பிளிப்கார்டின் இந்த பிளாக் பிரைடே விற்பனையானது நவம்பர் 30 வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பிளாக் பிரைடே விற்பனையில் சாம்சங் கேல்க்ஸி எஸ்20 மீண்டும் விற்பனைக்கு வருவதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கேஸ்பேக் சலுகை
மேற்கண்ட பல சலுகைகளுடன், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு 5 சதவீத கேஸ்பேக் சலுகையும் உண்டு. இந்த பிளாக் பிரைடே சலுகை மழையில் எல்ஜி ஜி8எக்ஸ் விற்பனை நன்றாக உள்ளதாகவும், இதனோடு நோட் 10, ஒப்போ எஃப்15, மோட்டோரோலா ரேஸ்ர் மற்றும் பல விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிகிறது.

வேறு என்ன சலுகை
Realme narzo 20 pro ஸ்மார்ட்போன் 6ஜிபி +64 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன் 13,999 ரூபாயாகும். இதே போகோ எம்2 9,999 ரூபாயிலிருந்தும், சாம்சங் கேலக்ஸி எஃப்41 15,499 ரூபாயிலும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவற்றோடு ஐபோன், சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் சலுகையில் உள்ளன. அதோடு நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனும் உண்டு.