அமேசான், பிளிப்கார்டு என்றாலே ஆஃபர்கள், தள்ளுபடிகள், கேஸ்பேக் என பல சலுகைகளை வாரி வழங்கும் என்ற எண்ணம் தான் வருகின்றன.
அதிலும் விழாக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஒரே சலுகை மழையாகத் தான் இருக்கும். இப்படி பல சலுகைகளை போட்டி போட்டுக் கொண்டு வழங்கும் இ- காமர்ஸ் நிறுவனங்கள் பல இருந்தாலும், முன்னணியில் உள்ளது அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் தான்.
இந்த நிலையில் கடந்த விழாக்கால விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனம், அதிக விற்பனையை கண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
இனி தங்க நகைகளை ஈஎம்ஐ-யில் வாங்கலாம்..! #Bluestone

அமேசானை விஞ்சிய பிளிப்கார்ட்
வால்மார்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியா சந்தையில் முதலிடத்திற்கு வந்துள்ளது. அதிலும் கடந்த அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து, நவம்பர் வரையில், அனைத்து முன்னணி சில்லறை விற்பனையாளர்களிடையே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் 90% பங்குகளித்துள்ளன. இதில் பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் 66% பங்கு வகித்துள்ளதாக ரெட் சீர் அறிக்கை தெரிவித்துள்ளது.

களைகட்டிய விழாக்கால விற்பனை
இந்த விழாக்கால பருவத்தில், சில்லறை நிறுவனங்கள் 88% வாடிக்கையாளர் வளர்ச்சியினை கண்டுள்ளது. அதிலும் இந்த ஆண்டு விழாக்கால விற்பனையில் முதன்மையாக டயர் 2 நகரங்களில் இருந்து, 40 மில்லியன் கடைகாரர்கள் மூலம் விற்பனை அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது. அதோடு இந்த ஆண்டு பண்டிகைகால மொத்த விற்பனை 8.3 பில்லியன் டாலர்களை கடந்துள்ளதாகவும் தெரிகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 65% அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

முக்கிய காரணம்
இதே கடந்த ஆண்டு விழாக்கால மொத்த விற்பனை மதிப்பு 5 பில்லியன் டாலராகும். ஆக நடப்பு ஆண்டின் விழாக்கால பருவத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே வாடிக்கையாளர்கள், கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளி, சுகாதார பாதுகாப்பு கருதி ஆன்லைனில் வாங்குவதையே பாதுகாப்பானதாக கருதியதே. ஆக கொரோனாவும் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

தொற்றுநோய் காலத்தில் பாதுகாப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த பண்டிகை கால விற்பனை 7 பில்லியன் டாலர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விற்பனையோ அதையெல்லாம் விஞ்சி விட்டது. ஆக தொற்றுநோய் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, ஆன்லைன் விற்பனை அமைந்தது. ஆக இப்படியொரு களைகட்டிய விற்பனையில், அமேசானை விட பிளிப்கார்ட் நிறுவனம் விஞ்சியுள்ளது நல்ல விஷயம் தானே.