வால்மார்ட் ஹோல்சேல் வர்த்தகத்தைக் கைப்பற்ற பிளிப்கார்ட் முடிவு.. ஜியோமார்ட் உடன் போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அமேசான் நிறுவனம் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கியபோது மொத்த ஈகாமர்ஸ் சந்தையிலும் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது மறந்திருக்க முடியாது. அமேசான் நிறுவனத்தைச் சமாளிக்க இந்தியாவில் இருந்த அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடியை வாரி வழங்கி அதிகளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியது, இதில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் நிறுவனங்களும் அடக்கம்.

 

இதேபோலத் தான் தற்போது இந்திய ரீடைல் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் களத்தில் இறங்கியுள்ளது. ஜியோ மார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கிய நாளில் இருந்து இந்தியாவில் இருக்கும் மொத்த ஈகார்மஸ் மற்றும் ஆன்லைன் ரீடைல் நிறுவனம் ஆடிப்போய் உள்ளது.

இதன் வெளிப்பாடாக, நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட்-இன் ஹோல்சேல் வர்த்தகப் பிரிவு, வால்மார்ட்-இன் ஹோல்சேல் வர்த்தக நிறுவனமான பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்-ஐ மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செம அடி வாங்கிய யெஸ் பேங்க்! 38,000-க்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்!

பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்

பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்

இந்தியாவில் இருக்கும் கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தான் பெஸ்ட் ப்ரைஸ். இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 28 கடைகளை வைத்து மிகப்பெரிய அளவில் கட்டமைப்பில் வர்த்தகம் செய்து வருகிறது. இது B2B வர்த்தகப் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

வால்மார்ட் - பிளிப்கார்ட்

வால்மார்ட் - பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் பெருமளவிலான பங்குகளை வால்மார்ட் சுமார் 16 பில்லியன் டாலருக்கு கைப்பற்றி 2 ஆண்டுகள் முடியும் தருவாயில், இந்திய ரீடைல் சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை எதிர்கொள்ளப் பிளிப்கார்ட் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்-இன் இந்திய வர்த்தகத்தின் ரீடைல் பிரிவை மொத்தமாக வாங்க உள்ளது பிளிப்கார்ட்.

ரிலையன்ஸ் ரீடைல்
 

ரிலையன்ஸ் ரீடைல்

ஜியோமார்ட் வெறும் ஈகாமர்ஸ் நிறுவனமாக இருந்தாலும் அது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை அறிமுகமாகி 10 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்றும் பெருமளவிலான மக்கள் ரீடைல் கடைகளையே நாடி செல்கின்றனர்.

இதன் வாயிலாகத் தான் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு இந்தியாவில் சுமார் 11,500 கடைகளைக் கொண்டு சுமார் 3 மாதத்திற்கு 2,000 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்து வருகிறது.

ரீடைல் கடைகள்

ரீடைல் கடைகள்

ரீடைல் பிரிவில் வலிமையாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தற்போது ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு வந்துள்ளதால், ஈகாமர்ஸ் துறையில் மட்டுமே இருக்கும் நிறுவனங்கள் தற்போது ரீடைல் வர்த்தகத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

இதன் வழியாகத் தான் பிளிப்கார்ட் தனது ஆன்லைன் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்தாமல் ரீடைல் கடைகளுக்குச் சேவை அளிக்கும் நோக்குடன் புதிய வர்த்தகத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளது.

போட்டி

போட்டி

பிளிப்கார்ட் தனது ஹோல்சேல் வர்த்தகப் பிரிவை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் முதலில் பேஷன் மற்றும் மளிகை பொருட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஹோல்சேல் பிரிவில் இருக்கும் ஜியோமார்ட், உதான், மெட்ரோ கேஷ் & கேரி மற்றும் அமேசான் B2B வர்த்தகங்கள் உடன் போட்டிப்போட உள்ளது.

ஊழியர்கள் மற்றும் வர்த்தகம்

ஊழியர்கள் மற்றும் வர்த்தகம்

பிளிப்கார்ட் தற்போது வால்மார்ட்-ன் பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட்-ஐ மொத்தமாக வாங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் 28 கடைகளில் இருந்து தான் பிளிப்கார்ட் வர்த்தகம் செய்ய உள்ளது. இதேபோல் வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பிளிப்கார்ட் குழுமத்திற்கு மாற உள்ளனர்.

வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

பிளிப்கார்ட் தற்போது வால்மார்ட்-ன் பெஸ்ட் ப்ரைஸ் பிராண்ட் மூலம் சிறுசிறு மளிகை கடைகள், நிறுவனங்களுக்கான தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். மேலும் இதன் மூலம் பல புதிய வர்த்தகங்களைப் பெற ஆலோசனை செய்து வருகிறோம் எனப் பிளிப்கார்ட் குரூப் சிஇஓ கல்யான் கிருஷ்ணமூர்த்தித் தெரிவித்துள்ளார்.

மேலும் பளிப்கார்ட் இப்புதிய கைப்பற்றல் மூலம் B2B பிரிவில் இருந்து B2B பிரிவு வர்த்தகத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart entering into wholesale business: Plans to acquire Walmart's Best Price Brand

Flipkart entering into wholesale business: Plans to acquire Walmart's Best Price Brand
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X