சென்னை, கோவையில் வர்த்தக விரிவாக்கம்.. பிளிப்கார்ட்-ன் ஸ்மார்ட்டான முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக நாட்டின் 2ஆம் தர அதாவது Iier 2 நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

 

அடுத்த இரண்டு நாட்கள் வங்கி விடுமுறையா.. தமிழகத்தில் என்ன நிலவரம்..!

இதேவேளையில் பிளிர்கார்ட் தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சமாளிப்பதற்காகவும் புதிதாக 8 லட்சம் சதுரடி தளத்தையும், 5 புதிய புல்பிள்மென்ட் சென்டர்களைத் துவங்க உள்ளது.

சென்னை, கோவையில் விரிவாக்கம்

சென்னை, கோவையில் விரிவாக்கம்

பிளிப்கார்ட் அறிவித்துள்ள புதிய 5 புல்பிள்மென்ட் சென்டரை டெல்லி, கொல்கத்தா, சென்னை, கோவை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மாத்தில் துவங்க உள்ளது. இந்த 6 சென்டரும் பளிப்கார்ட் நிறுவனத்தின் மளிகை பொருள் விற்பனை மற்றும் டெலிவரிக்கு பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளது.

மளிகை பிரிவில் 73,000 ஆர்டர்கள்

மளிகை பிரிவில் 73,000 ஆர்டர்கள்

இப்புதிய விரிவாக்கம் மூலம் பிளிப்கார்ட் தினமும் மளிகை பொருட்கள் விற்பனை பிரிவில் 73,000 ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய முடியும். பிளிப்கார்ட் துவங்கியுள்ள புல்பிள்மென்ட் சென்டர் மூலம் பொருட்களைப் பாதுகாப்பாக பேக் செய்து, உரிய நேரத்தில் டெலிவரி அளிக்க முடியும்.

ஈகாமர்ஸ் தளம்
 

ஈகாமர்ஸ் தளம்

கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க ஈகாமர்ஸ் மிகவும் பாதுகாப்பான தளமாக மாறியுள்ளது, எங்களுடைய புதிய மளிகை பொருட்களுக்கான சப்ளை செயின் கட்டமைப்பு மக்களுக்குத் தேவையான அனைத்து உணவு பொருட்களையும் உரிய நேரத்தில் வழங்க முடியும் எனப் பிளிப்கார்ட் கிராசரி பிரிவின் துணைத் தலைவர் ஸ்மிருதி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹைப்பர் லோக்கல் - பிளிப்கார்ட் குவிக்

ஹைப்பர் லோக்கல் - பிளிப்கார்ட் குவிக்

கடந்த மாதம் பிளிப்கார்ட் தனது ஹைப்பர் லோக்கல் சேவையான பிளிப்கார்ட் குவிக் சேவை புதிதாக டெல்லி, கூர்கான், காசியாபாத், நொய்டா, ஹைதராபாத், புனே ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்தது. இந்தப் பிளிப்கார்ட் குவிக் சேவை மூலம் 90 நிமிடத்தில் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart opening new fulfilment centres in Chennai, Coimbatore To Strengthen Grocery Supply Chain Infrastructure

Flipkart opening new fulfilment centres in Chennai, Coimbatore To Strengthen Grocery Supply Chain Infrastructure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X