90நிமிடத்தில் டெலிவரி.. ஜியோமார்ட்-க்குப் போட்டியாகப் பிளிப்கார்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வந்தாலும் விநியோகம் மற்றும் சப்ளை செயின் துறை வல்லரசு நாடுகளுக்கு இணையான ஒரு வளர்ச்சி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் வெளிநாடுகளுக்கு இணையான ஒரு கட்டமைப்பும், வேகமான போக்குவரத்து வசதிகளும் இல்லை.

 

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக உணவு டெலிவரி துறையைத் தாண்டி பிற பொருட்களை ஆர்டர் செய்யப்பட்ட 90 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவின் முன்னணி ஈகார்மஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட்-ன் இப்புதிய சேவையை இந்தியாவில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் குவிக்

பிளிப்கார்ட் குவிக்

பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ள இப்புதிய பிளிப்கார்ட் குவிக் சேவையின் கீழ், மளிகை பொருட்கள், போன், ஸ்டேஷ்னரி, எலெக்ட்ரிக் பொருட்கள் இன்னும் பல பொருட்களை 90 நிமிடத்தில் டெலிவரி செய்வதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இப்புதிய திட்டத்தைப் பெங்களூரில் வையிட்பீல்டு, ஹெச்எஸ்ஆர் லேஅவுட், பிடிஎம் லேஅவுட், பன்ஷங்கரி, கேஆர் புறம், இந்திராநகர் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே பிளிப்கார்ட அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு விலை

சிறப்பு விலை

இந்தச் சேவை காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையில் இயங்கும் என்றும் வாடிக்கையாளர்கள் 2 மணிநேரம் அல்லது 90 நிமிட சேவையைக் குறைந்தபட்ச கட்டணமாக 29 ரூபாயை செலுத்தி பெறலாம்.

குடோன்
 

குடோன்

தற்போது பிளிப்கார்ட் குவிக் சேவை கடைகளை வைத்துச் செய்யாமல் குடோனில் இச்சேவையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தையும் வைத்துச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வர்த்தக மாடல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் காரணத்தால் பொருட்களை வேகமாக டெலிவரி செய்ய முடியும் எனப் பிளிப்கார்ட் நம்புகிறது.

மேலும் விரைவில் இந்த வர்த்தக மாடலை கடைகளுடன் இணைத்துச் செய்யப் பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளதாக இந்நிறுவன துணை தலைவர் சந்தீப் கார்வா தெரிவித்துள்ளார்.

புதிய சேவைகள்

புதிய சேவைகள்

சமீபத்தில் பிளிப்கார்ட் தனது சேவைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு வால்மார்ட் நிறுவனத்தின் refurbished goods அதாவது பழுது சரிபார்க்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் தளமான 2GUD மற்றும் ஹோல்சேல் வர்த்தகப் பிரிவான பெஸ்ட் ப்ரைஸ் வர்த்தகத்தையும் கைபற்றியது.

மேலும் பேஷன் பிரிவில் அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் Flying Machine வர்த்தகத்தில் பெரும் பகுதியை 260 கோடி ரூபாய் முதலீட்டில் கைப்பற்றியது.

கடும் போட்டி

கடும் போட்டி

பிளிப்கார்ட்-ன் இந்த 90 நிமிட டெலிவரி மற்றும் அதிரடி சேவை விரிவாக்கம் ரிலையன்ஸ்-ன் ஜியோமார்ட், டன்சோ, க்ரோபர்ஸ், பிக்பேஸ்கட் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது.

இதனால் ஆன்லைன் ரீடைல் வர்த்தகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இனி வரும் காலத்தில் அதிகளவிலான முதலீடு, சேவை வரிவாக்கம், போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுதல், அல்லது கடுமையான நிதி நெருக்கடி ஆகியவை சந்திக்க நேரிடம் சூழல் உருவாகியுள்ளது.

காரணம் இதேபோன்ற நிலை தான் அமேசான் இந்தியாவில் தனது ஆன்லைன் வர்த்தகத்தைத் துவங்கிய போது ஏற்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart Quick 90-minute delivery: New game in online retail business space

Flipkart Quick 90-minute delivery: New game in online retail business space
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X