பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை வால்மார்ட் இந்தியாவில் அமேசானுடன் நேரடியாகப் போட்டிப் போட முடியாமல் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றி அதன் மூலம் போட்டிப் போட்டு வருகிறது.

அமேசான் ஆன்லைன் ஆடை விற்பனையில் சிறந்து விளங்கும் நிலையில், இப்பிரிவில் அமேசானின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகப் பிளிப்கார்ட் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தில் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 7.8 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் லிமிடெட் எலேன் சாலி மற்றும் வேன் ஹூசன் போன்ற முன்னணி பிராண்டுகளின் இந்திய விற்பனையைத் தனது கையில் வைத்துள்ள நிலையில், அமேசானின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், ஆன்லைன் ஆடை வர்த்தகத்தில் பிளிப்கார்ட் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும் இந்த முதலீட்டைச் செய்துள்ளது.

 

அமேசான் ஏற்கனவே ஜியோமார்ட் எழுச்சியால் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் பிளிப்கார்ட்-ன் அடுத்தடுத்த முடிவுகள் அமேசானுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.

ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா குழுமத்தில் பிற வர்த்தகம் சிறப்பாக இருந்தாலும், சில்லறை மற்றும் நுகர்வோர் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வெற்றியையும், வர்த்தகத்தையும் பெற முடியவில்லை. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், பிளிப்கார்ட்-ன் இந்த 1,500 கோடி ரூபாய் டீல் மூலம் கிடைத்த பணத்தை ஆதித்யா பிர்லா குழுமம் தனது கடனை குறைக்கவும், புதிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் முதலீடு செய்ய உள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்த டீல் மூலம் பிளிப்கார்ட்-ன் பிரத்தியேக ஆடை விற்பனை தளமான மிந்திரா உடன் ஆதித்யா பிர்லா பேஷன்ஸ் நிறுவன ஆடைகளை விற்பனை செய்யவும், இந்தியா முழுக்க டெலிவரி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனால் பிளிப்கார்ட் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு மிகப்பெரிய வர்த்தக லாபம் கிடைத்துள்ளது என்பது தான் உண்மை.

 அமேசான்
 

அமேசான்

ஆன்லைன் பேஷன் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவிலான சந்தையை அமேசான் வைத்திருக்கும் போது பிளிப்கார்ட்-ன் இந்த டீல் அமேசான் பேஷன் விற்பனை அடித்தளத்தை ஆடிப்படைக்கும் அளவிற்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆன்லைன் ஆடை விற்பனையில் ஜியோமார்ட் சிறப்பாகச் செயல்படும் நிலையில், பிளிப்கார்ட்-ன் இந்த வர்த்தக இணைப்பு அமேசானுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது.

260 கோடி ரூபாய்

260 கோடி ரூபாய்

பிளிப்கார்ட் நிறுவனம் ஆதித்யா பிர்லா பேஷன்ஸ்-ன் 7.8% பங்குகளைக் கைப்பற்றியதை போலவே சில மாதங்களுக்கு முன்பு ஆடை வர்த்தகப் பிரிவில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காக அரவிந்த் யூத் பிராண்ட்ஸ் கீழ் இருக்கும் Flying Machine பிராண்டில் 260 கோடி ரூபாய் முதலீட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக் கைப்பற்றியது.

முதலீடுகள்

முதலீடுகள்

ஜியோமார்ட் ஆன்லைன் சந்தைக்குள் வந்த பின்பு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் brick-and-mortar வர்த்தகக் கடைகளில் முதலீடு செய்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart's Big Step in Fashion Segment: New trouble for Amazon

Flipkart's Big Step in Fashion Segment: New trouble for Amazon
Story first published: Saturday, October 24, 2020, 20:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X