ஏற்றுமதியாளர்கள், சார்ந்த நிறுவனங்களுக்கும் சிறந்த பணப்புழக்கத்தை அளியுங்கள்.. நிதியமைச்சர் அட்வைஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து வங்கி துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றது.

 

வங்கி துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

அதோடு வங்கியில் பல சீர்திருத்தங்களை செய்து வரும் நிலையில், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மீதான மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறப்புமிகு சேவையை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் மோடி அரசுக்கு லாபம்..!

வங்கி சீர்திருத்தங்கள்

வங்கி சீர்திருத்தங்கள்

ஏற்கனவே EASE 1.0, 2.0,3.0 என்ற வங்கியிய சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் EASE 4.0 (Enhanced Access and Service Excellence) என்ற சீர்திருத்தத்தினை வெளியிட்டுள்ளார். இதில் EASE 1.0ல் வாரக்கடன் சொத்துகளுக்கான தீர்வுகளின் மீது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வெளிப்படையாகக் காட்டியது. இப்படி ஒவ்வொரு வெளியீட்டின் மூலமும் வங்கிகளுக்கான புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றார்.

EASE 4.0 வெளியீடு

EASE 4.0 வெளியீடு

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட EASE 4.0ல் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.

பொதுத்துறை வங்கிகள் கார் கடன்கள், இகாமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் இஎம்ஐ சலுகைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ வாடிக்கையாளர்களுக்கு போன்ற புதிய சில்லறை வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்குவதில் இனி பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்தும்.

தரமான வங்கி சேவை
 

தரமான வங்கி சேவை

வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் பொறுப்பாக இருத்தல், தரமான வங்கி சேவை, கடன் பெறுதல், PSBயின் உத்யாமி மித்ரா, நிதி சேர்க்கை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பொதுத்துறை வங்கிகளின் பிராண்டுகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வங்கிகளின் சேவை தரத்தினை மேம்படுத்த அரசு அடுத்தடுத்த சீர்த்திருத்த விதிகளை செய்து வருகின்றது.

சிறந்த பணப்புழக்கத்தினை அளியுங்கள்

சிறந்த பணப்புழக்கத்தினை அளியுங்கள்

இதற்கிடையில் இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதற்காக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்புடன் தொடர்ந்து விவாதிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையை உணர்ந்து செயல்படுங்கள்

தேவையை உணர்ந்து செயல்படுங்கள்

மேலும் வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ள நிறுவனங்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து CASA டெபாசிட்டுகள் குவிந்து வருவதாகவும், ஆனால் அதே நேரத்தில் கடன் குறைந்து வருவதாகவும் கூறியுள்ள நிதியமைச்சர், கடன் விரிவாக்கம் பற்றி வங்கிகள் ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM nirmala sitharaman asks PSBs provide better credit flow to the exporters and oriented firms

FM nirmala sitharaman asks PSBs provide better credit flow to the exporters and oriented firms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X