அட கொரோனாவ விடுங்க.. உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவின் கொடிய கொரோனா வைரஸால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இது வரை 2000 பேருக்கு மேல் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை 75,000 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சீனாவினைத் தவிர மற்ற இடங்களின் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் CNN world செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

சீனா வர்த்தகம்
 

சீனா வர்த்தகம்

இந்த அசாதாரண நிலையை சமாளிக்க சீனா அரசு கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்ப்பதற்காக தொழில் சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூட உத்தரவிட்டது. இதனால் சீனாவின் மொத்த வர்த்தகமும் சுருண்டு போயுள்ளது. சொல்லப்போனால் சீனாவின் பொருளாதாரம் இதனால் பலமாக வீழ்ச்சி கண்டு வருகிறது எனலாம்.

சீனா வர்த்தகம்

சீனா வர்த்தகம்

இந்த அசாதாரண நிலையை சமாளிக்க சீனா அரசு கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்ப்பதற்காக தொழில் சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூட உத்தரவிட்டது. இதனால் சீனாவின் மொத்த வர்த்தகமும் சுருண்டு போயுள்ளது. சொல்லப்போனால் சீனாவின் பொருளாதாரம் இதனால் பலமாக வீழ்ச்சி கண்டு வருகிறது எனலாம்.

தொழில் துறையினருடன் பேச்சு வார்த்தை

தொழில் துறையினருடன் பேச்சு வார்த்தை

சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்திய தொழில்துறையில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து, பல்வேறு தொழில்களின் பிரதிநிதிகள், இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு, அசோசாம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் செவ்வாய்கிழமையன்று கூட்டம் ஒன்றை நடத்தினர். இங்கு தொழில் துறையினர் மற்றும் பல அதிகாரிகளுடனும் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். மேலும் அதன் தாக்கம் இந்திய வர்த்தகத்தில் எந்தளவுக்கு உள்ளது என்பதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அவர்களின் கவலைகளையும் கேட்டறிந்தார்.

இறக்குமதி – ஏற்றுமதி பாதிப்பு
 

இறக்குமதி – ஏற்றுமதி பாதிப்பு

இதையடுத்து நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், சீனாவின் கொரோனா வைரசால் இந்திய ஏற்றுமதி, இறக்குமதியுடன் இதர தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உரிய ஆவணங்கள் வந்து சேராததால், இந்திய துறைமுகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உற்பத்தியை பெருக்க இது நல்ல வாய்ப்பு

உற்பத்தியை பெருக்க இது நல்ல வாய்ப்பு

மேலும் இதனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம் உற்பத்தியாளர்கள் இந்த பாதிப்புகளை சவாலாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. ஆக தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது நமக்கு நல்ல வாய்ப்பு என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

விரைவில் மீட்பு நடவடிக்கை

விரைவில் மீட்பு நடவடிக்கை

மேலும் இன்று மத்திய அரசின் பல்வேறு அமைச்சக செயலாளர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆலோசனைக்கு பின்னர், பிரதமர் அலுவலகத்துடனும் ஆலோசனை நடத்தப்படும். மேலும் அதன் அடிப்படையில், கொரோனா வைரசால் உள்நாட்டு தொழில்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது தான் நல்ல விஷயம்

இது தான் நல்ல விஷயம்

கொரோனா இறக்குமதி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில், கொரோனா வைரசால் விலைவாசி உயர்ந்ததாக எந்த தகவலும் இல்லை. அதேபோல் உயிரைக்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை தட்டுப்பாடு ஏதும் இல்லை. சில மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு தடையை நீக்குமாறு மருந்து தொழில்துறை கேட்டுள்ளது. ஆனால் அப்படி செய்தால் சில மருந்துகள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM Nirmala sitharaman said steps soon to deal with coronavirus impact in Indian industry

Finance minister Nirmala sitharaman said government will soon announce measures to help ease the manufacturing and supply plunge of coronavirus outbreak in china after concerns about raw material shortages.
Story first published: Wednesday, February 19, 2020, 11:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more