பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.. நிர்மலா சீதாராமன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது. இதற்கிடையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றார்.

 

இன்று காலை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதனை பற்றி விவாதிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கபட்டது.

குறிப்பாக பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏமாற்றம் அளிக்கும் அறிக்கை

ஏமாற்றம் அளிக்கும் அறிக்கை

ஆனால் ஏமாற்றத்தினை தரும் விதமாக அப்படி ஏதும் அறிவிப்புகளை கொடுக்கவில்லை எனலாம். மாறாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ளார். இது சற்றே ஏமாற்றித்தினை தரும் அறிவிப்பு எனலாம். ஏனெனில் பல தரப்பிலும் இது பற்றிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இது சரியான நேரம் அல்ல கூறியிருப்பது சற்று ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

இனி விலை குறையாதா?

இனி விலை குறையாதா?

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாயானது பல மடங்கு பெருகியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில், ஜிஎஸ்டியின் கீழ் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை என்ற நிலையில், இனி பெட்ரோல் டீசல் விலை குறையுமா? சாமானிய மக்கள் இனியும் அதிகளவிலான தொகையை எரிபொருளுக்கான தொகையை செலவிட வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

உச்சத்தில் எரிபொருட்கள் விலை
 

உச்சத்தில் எரிபொருட்கள் விலை

அனுதினமும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையானது கடந்த சில நாட்களாக மாற்றம் காணாவிட்டாலும், தொடர்ச்சியாக உச்சம் தொட்டு வந்தது. பல மா நிலங்களிலும் 100 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்த நிலையில், தமிழகத்தில் 100 ரூபாய்க்கும் கீழாக காணப்படுகின்றது. எனினும் இனி வரும் நாட்களில் இந்த விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பயோடீசலுக்கு வரி குறைப்பு

பயோடீசலுக்கு வரி குறைப்பு

எனினும் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படாவிட்டாலும், பயோடீசலுக்கு வரி குறைப்பு செய்துள்ளது. இது 12%ல் இருந்து 5% ஆக குறைத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய சலுகை.. தீபாவளிக்கு முன் சம்பளத்தில் உயர்வு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

FM nirmala sitharaman said this is not right time to decide on petrol and diesel under GST

GST latest updates.. FM nirmala sitharaman said this is not right time to decide on petrol and diesel under GST
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X