நிர்மலா சீதாராமன் கடந்த மே 13, 2020-ல் இருந்து, பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்திக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி சொன்ன "சுய சார்பு பாரதம்" திட்டம் தொடர்பாகவும், கொரோனா வைரஸில் இருந்து மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் மீட்டு எடுப்பது தொடர்பாக பேசி வருகிறார்.
இந்த சந்திப்பில் அரசு செய்த வேலைகளையும், இனி செய்ய இருக்கும் வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா!

இன்று யாருக்கு
இன்று காலை 11 மணியில் இருந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். இன்று
1. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
2. சுகாதாரம் & கல்வி
3. கொரோனா வைரஸ் காலத்தில் வியாபாரம்
4. கம்பெனிகள் சட்டத்தில், கிரிமினல் குற்றங்களாக இல்லாமல் மாற்றுவது
5. வியாபாரம் செய்வதை எளிமைப்படுத்துவது
6. அரசு நிறுவனங்கள் & துறை சார் கொள்கைகள்.
7. மாநில அரசு & அதன் வளங்கள்... என 7 முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச இருக்கிறாராம்.

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
இதில் முதலாவதாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மிகவும் முக்கியமானது. இந்த ஒரு திட்டத்தை நம்பி இந்தியாவில் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 208 - 19 நிதி ஆண்டில் 61,815 கோடி ரூபாய் இந்த் திட்டத்துக்கு செலவழித்தார்கள்.

ரூ. 40,000 கோடி
2019 - 20 நிதி ஆண்டில் 71,002 கோடி ரூப்பாய் செலவழித்து இருக்கிறார்கள். இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 61,500 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்போது இன்று, கூடுதலாக 40,000 கோடி ரூபாயை ஒதுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பயன்
இப்படி கூடுதல் நிதி ஒதுக்குவதால் என்ன பயன் கிடைக்கும்..? இதனால் 300 கோடி நாள் வேலை (Man days of work) கொடுக்க உதவுமாம். ஆக இந்த திட்டம் மூலம், அடித்தட்டு மக்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பது, புதிதாக இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு, பெரு உதவியாக இருக்கும் என நம்பலாம்.