இன்போசிஸ் Vs நிர்மலா சீதாராமன்.. புதிய வருமான வரித் தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து தரப்பினராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய வருமான வரித் தளத்தில் துவங்கிய நாள் முதல் ஏகப்பட்ட பிரச்சனை, கோளாறு. இதனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தை டேக் செய்து குற்றம்சாட்டினார்.

 

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்போசிஸ் Vs நிர்மலா சீதாராமன்.. புதிய வருமான வரித் தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனை..!

இந்நிலையில் இன்போசிஸ் புதிய வருமான வரித் தளத்தில் உள்ள பழைய ஐடிஆர் அறிக்கை, இணைய ஓப்புதல்கள் உட்படப் பட்டியலிடப்பட்ட 5 தொழில்நுட்ப பிரச்சனைகளை அடுத்த ஒரு வாரத்திற்குள் சரி செய்ய உறுதி அளித்துள்ளது.

ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரித் தளத்தில் தொடர்ந்து புதுப்புது பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் இப்புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் உடனடியாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..!

புதிய வருமான வரித் தளத்தில் சுமார் 2000 பிரச்சனைகள் குறித்து 700 மின்னஞ்சல் வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்போசிஸ் மற்றும் நிதியமைச்சகம் மத்தியில் நடத்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அனுராங் தாக்கூர், தருண் பஜாஜ், ஜகநாத் மோஹபத்ரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM urges Infosys to fix all issues on new I-T portal

FM urges Infosys to fix all issues on new I-T portal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X