சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை என்றாலே பயந்து ஒதுங்கிய காலம் வேறு. இன்று பலரும் இதில் துணிந்து முதலீடு செய்கின்றனர்.

 

ஆனால் அவ்வாறு பலரும் முதலீடு செய்து நஷ்டம் காண்கின்றனர். ஏனெனில் சரியான வழிகாட்டுதல் இல்லாமை, சரியான நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல், ஆரம்பத்திலேயே அகலக்கால் வைக்கின்றனர்.

எதையும் ஒன்று பல முறை ஆலோசித்து, ஒரு பங்கினை வாங்க நிபுணர்கள் சொல்கின்றனர் என்றாலும், எதற்காக வாங்க சொல்கின்றனர். அந்த பங்கின் முந்தைய பெர்பார்மன்ஸ் எப்படி? அதன் ப்யூச்சர் நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் கணித்து வாங்குவது நல்லது. இதற்கிடையில் சர்வதேச புரோக்கிங் நிறுவனங்கள், 10 பங்குகளின் இலக்கு விலையினை அதிகரித்துள்ளது, அது என்னென்ன பங்குகள்? வாருங்கள் பார்க்கலாம்.

லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்

அந்த வகையில் இன்று நாம் முதலில் பார்க்கவிருக்கும் பங்கு. எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட். இதன் இலக்கு விலை 1,660 ரூபாயில் இருந்து 1,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் பெரிய ஒப்பந்தங்களில் இந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக CLSA நடப்பு ஆண்டின் பிற்பாதியில் 2 - 3.5% அதிகரிக்கும் எனவும், 2021ம் நிதியாண்டிலும், 2022ம் நிதியாண்டிலும் 4% ஏற்றம் காணலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது.

கஜாரியா செராமிக்ஸ் பங்கு

கஜாரியா செராமிக்ஸ் பங்கு

Jefferies நிறுவனம், கஜாரியா செராமிக்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை 550 ரூபாயில் இருந்து, 650 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இரண்டாவது காலண்டில் நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் குறுகிய கால நோக்கில் இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றும் ஜெப்பெரீஸ் கணித்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையை CLSA 2,525 ரூபாயிலிருந்து, 2,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி நன்றாக கண்டுள்ள நிலையில், இதன் இலக்கினை நிபுணர்கள் அதிகரித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 2021 - 2023ம் நிதியாண்டில் வருவாய் மதிப்பீடுகளை 4 - 5% குறைத்தும் மதிப்பிட்டுள்ளது.

ஏசிசி பங்கு இலக்கு

ஏசிசி பங்கு இலக்கு

ஏசிசி நிறுவனத்தின் பங்கு இலக்கினை 1,900 ரூபாயில் இருந்து, 2,200 ரூபாயாக அதிகரித்துள்ளது ஜெப்பெரீஸ் நிறுவனம். இந்த நிறுவனம் மூன்றாவது காலாண்டில் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஏசிசி நிறுவனத்தின் பங்கு விலையானது 7.75 ரூபாய் அதிகரித்து, 1,628.60 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் இலக்கு விலை

ஹெச்டிஎஃப்சி வங்கியின் இலக்கு விலை

ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு இலக்கானது 1,450 ரூபாயில் இருந்து, 1,525 ரூபாயாக அதிகரித்துள்ளது CLSA. இது வலுவான தேவை, அதிகரித்து வரும் நிதி வணிகம், இவற்றின் காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதன் இலக்கினை அதிகரித்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் இலக்கு

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் இலக்கு

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் பங்கு விலையின் இலக்கினை Haitong Securities நிறுவனம் 6,450 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 2022 மற்றும் 2023ம் நிதியாண்டில் 16 - 31% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கிறது. அடுத்த 2 -3 வருடங்களில் வலுவான வளர்ச்சியினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் வங்கியின் பங்கு இலக்கு

ஃபெடரல் வங்கியின் பங்கு இலக்கு

சிட்டி புரோக்கரேஜ் நிறுவனம் அதன் பங்கு இலக்கினை 75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இவ்வங்கியின் வலுவான செயல்பாடு காரணமாக மாற்றியமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகப்படியான பணப்புழக்கம் மற்றும் வலுவான வளர்ச்சி இந்த பங்கின் விலையேற்றத்திற்கு காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரக் பங்குகள்

டிரக் பங்குகள்

டிரக் தேவை சீராக அதிகரிக்கும் என்று ஜெஃப்பெரிஸ் கணித்துள்ளது. கட்டுமானமும் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து லாரிகள் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு விலையானது டிரக் பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

HDFC லைஃப் பங்கு இலக்கு

HDFC லைஃப் பங்கு இலக்கு

HDFC லைஃப் பங்கு விலையானது ஜெஃப்பெரிஸ் நிறுவனம், அதன் இலக்கினை 730 ரூபாயில் இருந்து 760 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டை விட பிரீமியம் 21% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் எதிர்பார்த்ததை விட வணிகம் மெதுவாக வளர்ச்சி கண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Foreign brokerages up the target price of 10 stocks: do have any?

Foreign brokerages raise HDFC bank, federal bank, ACC, HUL, L&T technology services, Kajaria Ceramics, Dr Reddy's Laboratories, HDFC life and some other stock prices target.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X