ஆரக்கிள் இணைந்தார் விஷால் சிக்கா.. இனி புதுச் சகாப்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான விஷால் சிக்கா பல்வேறு காரணங்களுக்காக இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்டு மொத்தமாக வெளியேறினார். இப்படி வெளியேறிய விஷால் சிக்கா செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கிப் பல பெரிய நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

இந்நிலையில் விஷால் சிக்கா தற்போது உலகின் மாபெரும் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஆரக்கிள் கார்ப்-இன் நிர்வாகக் குழுவில் இணைய உள்ளார்.

அம்பானியின் புதுப் பிஸ்னஸ்.. அபுதாபி நிறுவனத்துடன் சூப்பர் கலக்கல் கூட்டணி..!

Vianai சிஸ்டம்ஸ்

Vianai சிஸ்டம்ஸ்

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் சிக்கா Vianai சிஸ்டம்ஸ் என்கிற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிலையில் விஷால் சிக்கா ஆராக்கிள் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இணைந்து உள்ளார்.

ஆரக்கிள்

ஆரக்கிள்

இதுகுறித்து ஆரக்கிள் கார்ப் கூறுகையில், 52 வயதாக விஷால் சிக்கா உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையின் தலைசிறந்த நிபுணர் ஆவார். இவர் ஆரக்கிள் நிறுவனத்தின் இணைந்து வர்த்தக மதிப்பையும், நிறுவனத்தில் ஏற்பட்ட உள்ள பல்வேறு மாற்றங்களில் உதவ உள்ளார் என ஆரக்கிள் கார்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லேரி எலிசன்
 

லேரி எலிசன்

ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர், நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான லேரி எலிசன் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் தலைசிறந்த நிபுணர்களில் விஷால் சிக்காவும் ஒருவர் எனக் கூறியுள்ளார். இவர் இனி ஆரக்கிள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

விஷால் சிக்காவின் அனுபவமும் திறமையும், ஆரக்கிள் நிறுவனத்திற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒறு நிபுணத்துவ ஆலோசனையும், தொலைநோக்கு பார்வையும் தரும் என லேரி எலிசன் விஷால் சிக்காவை பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளார்.

சாப்ரா கேட்ஸ்

சாப்ரா கேட்ஸ்

மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாப்ரா கேட்ஸ் கூறுகையில், விஷால் சிக்காவிற்கு ஆரக்கிள் 2வது தலைமுறை உள்கட்டுமானம், டேட்டாபேஸ் மற்றும் அப்ளிகேஷன் ஆகியவை இணைந்து வரும் ஆரக்கிள் கிளவுட் குறித்து நன்கு தெரியும். இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்ட போகும் மாற்றத்திற்கும் இவருடைய ஆலோசனை பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ்-இல் டாக்டர் பட்டம் பெற்ற விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் சேரும் முன் எஸ்ஏபி என்னும் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார்.

இன்போசிஸ் வளர்ச்சி

இன்போசிஸ் வளர்ச்சி

விஷால் சிக்கா நியமனத்திற்குப் பின்பு இன்போசிஸ் தனது ஆஸ்தான சேவைத்துறையிலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாறினாலும், 3 வருட நிர்வாகத்தில் இன்போசிஸ் வருவாய் 25 சதவீதம் அதிகரித்தது. பங்கு மதிப்பு 9.6 சதவீதம் அதிகரித்தது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஐரோப்பாவில் இருந்து விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்திற்கு வந்த பின்னர், இந்நிறுவனத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக விளங்கியவர், இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி வைத்துத் தொடர் குற்றச்சாட்டுகள் மூலம் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்பு இன்போசிஸ் அதிகாரமற்ற நிர்வாகப் பதவியில் சில மாதம் இருந்து வெளியேறினார். இதன் பின்பு தான் Vianai சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார் விஷால் சிக்கா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former Infosys CEO Vishal Sikka, Joins Oracle’s Board Of Directors

Vishal Sikka, Infosys Ltd.’s former chief executive officer who recently launched his Artificial Intelligence startup Vianai Systems, has been nominated to the board of Oracle Corp.
Story first published: Wednesday, December 11, 2019, 9:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X