அடமான சொத்து விற்பனையா.. மாருதியின் முன்னாள் ஊழியரா இப்படி செய்தார்.. பலே கில்லாடி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மீது மத்திய புலனாய்வுத் துறை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

சரி ஒரு நிர்வாக இயக்குனர் மீது மோசடி வழக்கா? அப்படி என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா, கடன் மோசடி வழக்கு தான்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 110 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப சீப், ஆனா உயிர்போகும் பிரச்சனை.. இந்திய டெலிகாம் துறையின் உண்மை முகம்..!

யார் இவர் ஜெகதீஷ்

யார் இவர் ஜெகதீஷ்

பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கெஜதீஷ் கட்டார், கடந்த 1993ம் ஆண்டு மார்கெட்டிங் பிரிவில் இயக்குனராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 1999ம் ஆண்டு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த 2007ம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றார். மாருதி சுசூகி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் கார்னேஷன் ஆட்டோ (Carnation Auto India Limited) என்ற வாகன விற்பனை நிறுவனத்தை தொடங்கினார்.

அடமான சொத்து விற்பனை

அடமான சொத்து விற்பனை

இந்த நிலையில் 2009ம் ஆண்டு நிறுவனச் செயல்பாடுகளுக்கென பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கியிடமிருந்து 170 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை அவர் முறையாக செலுத்தாத நிலையில், அந்தக் கடனைக் 2015ம் வங்கி அந்தக் கடன் தொகையை வாராக் கடனாக அறிவித்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அடமானமாக சொத்தை வைத்திருந்த நிலையில் சொத்தை விற்றுள்ளார்.

அனுமதியின்றி விற்பனை
 

அனுமதியின்றி விற்பனை

இந்த நிலையில் கடன் வாங்க அடமானமாக காட்டிய சொத்துகளை வங்கியின் அனுமதியின்றி விற்பனை செய்தது தான் தற்போதைய பிரச்சனையே. இந்த நிலையில் தான் சிபிஐ அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. ஒரு உயர் பதவியில் இருந்த அதிகாரியே இப்படி ஒரு மோசடி செய்திருப்பது சற்று பரப்பரப்பை ஏரற்படுத்தியுள்ளது.

சிபிஐ ரெய்டு

சிபிஐ ரெய்டு

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கார்னேஷன் ஆட்டோ நிறுவனத்தின் அலுவலகத்திலும், நொய்டாவில் உள்ள அந்த நிறுவன அதிகாரி ஒருவரின் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையில் இந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former maruthi Suzuki MD jagadish khattar charged for bank fraud

Former MD of Maruthi Suzuki jagadish khattar charged for Rs.110 crore alleged Bank fraud. CBI registered a Case under sections related to criminal conspiracy and cheating on a complaint from PNB.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X