கடன் மோசடி.. எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் கைது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் முன்னாள் தலைவரான பிரதீப் சௌத்ரி கடன் மோசடி செய்த காரணத்திற்காக டெல்லியில் அவர் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

 

ஐசிஐசிஐ வங்கி சந்தா கோச்சார் செய்த கடன் மோசடிகள் இந்தியா முழுவதும் பெரிய அளவில் வெடித்த நிலையில் இன்று எஸ்பிஐ வங்கி முன்னாள் தலைவர் பிரதீப் சௌத்ரி கடன் மோசடி சிக்கியுள்ளது வங்கி துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் ரூ.2.48 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி தான் டாப் லூசர்..!

பிரதீப் சௌத்ரி

பிரதீப் சௌத்ரி

பிரதீப் சௌத்ரி எஸ்பிஐ வங்கி தலைவராக இருந்த போது கோடவன் குரூப்-க்கு சொந்தமான சொத்துகளைக் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கடனில் தான் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு டெல்லியில் அவரது வீட்டில் இருந்து ஜெய்சால்மர் சதர் போலீஸ் அதிகாரிகள் பிரதீப் சௌத்ரி-யை கைது செய்துள்ளனர்.

கோடவன் குரூப்

கோடவன் குரூப்

2008ல் கோடவன் குரூப் ஹோட்டல் கட்டுவதற்காக 24 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றனர், அப்போதும் கோடவன் குரூப்-ன் பிற ஹோட்டல்கள் இயங்கி வந்தது. கடன் செலுத்த காலதாமதம் ஆனாதாக NPA-வாக அறிவிக்கும் முன்பே கோடவன் குரூப்-க்கு சொந்தமான இரு ஹோட்டல்களையும் கைப்பற்றியது.

ஆல்கமிஸ்ட் ARC
 

ஆல்கமிஸ்ட் ARC

இதன் பின்பு இரு ஹோட்டல்களையும் ஆல்கமிஸ்ட் ARC நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து கோடவன் குரூப் வழக்குத் தொடுத்தது. 2017ல் விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பை மறுமதிப்பீடு செய்யும் பணியை எஸ்பிஐ செய்தபோது. ஆல்கமிஸ்ட் ARC 2016ல் கைப்பற்றிய இவ்விரு சொத்துக்களின் சந்தை மதிப்பு 160 கோடி ரூபாய் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு 200 கோடி ரூபாய்.

பிரதீப் சௌத்ரி-க்குப் பதவி

பிரதீப் சௌத்ரி-க்குப் பதவி

தற்போது எஸ்பிஐ வங்கி பணியில் இருந்து ஒய்வு பெற்ற முன்னாள் தலைவரான பிரதீப் சௌத்ரி ஆல்கமிஸ்ட் ARC நிறுவனத்தின் டைரெக்டர் ஆக உள்ளார். இதனால் திட்டமிட்டு கோடவன் குரூப் ஹோட்டல்களைக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது.

கைது செய்ய உத்தரவு

கைது செய்ய உத்தரவு

மேலும் கைது வாரென்ட்-ல் ஆல்கமிஸ்ட் ARC நிறுவனத்தின் அலோக் தீர் மற்றும் பிரதீப் சௌத்ரி பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரதீப் சௌத்ரி கைது செய்யப்பட்ட நிலையில் அலோக் தீர் மாயமாகியுள்ளார். இவர்களுடன் சேர்த்து சுமார் 6 பேர் மீதும் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அருந்ததி பட்டாசார்யா

அருந்ததி பட்டாசார்யா

2013ல் பிரதீப் சௌத்ரி எஸ்பிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய போது தான் அருந்ததி பட்டாசார்யா தலைவர் பதவியை ஏற்றார். 206 ஆண்டு வரலாறு கொண்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதல் பெண் தலைவர் என்றால் அருந்ததி பட்டாச்சார்யா தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former SBI chairman Pratip Chaudhuri arrested over Godawan Group in loan scam case: Report

Former SBI chairman Pratip Chaudhuri arrested over Godawan Group in loan scam case: Report
Story first published: Monday, November 1, 2021, 19:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X