இன்ஃபோசிஸ் மீது வழக்கு போட்ட முன்னாள் உயர் அதிகாரி.. என்ன நடந்தது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் வயது மற்றும் பாலின சார்பு குறித்த வழக்கை எதிர்கொண்டுள்ளது.

 

இது குறித்து முன்னாள் ஊழியரான ஜிம் ப்ரீஜீன் ஐடி நிறுவனம் தனக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பணியமர்த்தல் நடைமுறைகளில் பாரபட்சமான விருப்பத்தேர்வுகள் குறித்த கவலைகளை எழுப்பியதற்காக, ப்ரீஜின் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறும் கோரிக்கையை நிராகரிக்க கோரிய வழக்கினை அமெரிக்க நீதிபதி நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

யாருக்கு எதிராக வழக்கு?

யாருக்கு எதிராக வழக்கு?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் SVP மற்றும் கன்சல்டிங் தலைவர் மார்க் லிவிங்ஸ்டன், முன்னாள் கூட்டாளர்களுடனான டான் ஆல்பிரைட் மற்றும் ஜெர்ரி கார்ட்ஸ் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு எதிராக, வழக்கினை தொடர ப்ரீஜீன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் சந்திப்பு

அதிகாரிகளுடன் சந்திப்பு

இதில் மார்க் லிவிங்ஸ்டன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் பணியில் இருந்தார். இவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

கடந்த 2019ம் ஆண்டில் இன்ஃபோசிஸ் 59 வயதான ப்ரீஜினை திறமை கையகப்படுத்தலின் விபி-யாக நியமித்தது. ப்ரீஜின் தனது புதிய பதவிக்கு மத்தியில், இன்ஃபோசிஸ் கூட்டாளர்களுடன் பணியமர்த்தல் தேவைகளை தெரிந்து கொள்ளும் விதமாக ஒரு சந்திப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

யாரை பணியமர்த்துவதில் தயக்கம்
 

யாரை பணியமர்த்துவதில் தயக்கம்

இந்த கூட்டத்தில் இந்திய வம்சாவளியினை சேர்ந்த கூடுதல் ஆலோசகர்கள், வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், ஆகியோரை பணியமர்த்துவதில் கூட்டாளர்கள் தயக்கம் காட்டுவதாக நீதிமன்ற ஆர்டரில் கூறப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதம்

இது சட்டவிரோதம்

கடந்த டிசம்பர் 2018ல் லிவிங்ஸ்டன் இன்ஃபோசிஸில் பணியில் சேர்ந்தார். ப்ரீஜின் அந்த சமயத்தில் மேற்பார்வையாளராகவும் இருந்தார். நீதிமன்ற ஆர்டரில் லிவிங்ஸ்டன் பணியில் சேர்ந்த பிறகு, அவர் ப்ரீஜினை இன்ஃபோசிஸ் நியூயார்க் அலுவலகத்தில் சந்தித்து, வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒதுக்கி வைக்க விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் சட்டவிரோதமானது என ப்ரீஜின் லிவிங்ஸ்டனிம் கூறியதாகவும் கூறப்படுகின்றது.

பதவியில் இருந்து நீக்கி விடுவேன்

பதவியில் இருந்து நீக்கி விடுவேன்

இதற்கு கோபமாக பதிலளித்த லிவிங்ஸ்டன், இதனை செய்யாவிட்டால் பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் பிறகு தான் ப்ரீஜின் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former top executive sued Infosys in US

Infosys faces age and sex bias lawsuit in US by a former VP of talent acquisition
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X