ஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்! CBIC தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த 47 நாட்களில் 11,052 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி ரீஃபண்ட் தொகைகளை வழங்க அனுமதி கொடுத்து இருப்பதாக, மத்திய மறைமுக வரி வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.

ஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்! CBIC தகவல்!

 

"இந்த லாக் டவுன் காலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு, குறிப்பாக எம் எஸ் எம் இ துறையைச் சேர்ந்தவர்கள் கையில் பணம் புழங்குவதை உறுதி செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம்" என ட்விட்டரில் சொல்லி இருக்கிறது மத்திய மறைமுக வரிகள் வாரியம்.

8 ஏப்ரல் 2020 முதல் 24 மே 2020 வரையான காலத்தில், மொத்தம் ரூ.11,052 கோடி ரூபாய் மதிப்புள்ள, 29,230 ரீஃபண்ட் க்ளெய்ம்கள் கொடுத்து இருப்பதாகவும் மத்திய மறைமுக வரி வாரியம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை செய்வதை உறுதி செய்யும் அதே நேரத்தில், சரக்கு மற்றும் சேவை வரி ரீஃபண்ட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவாம்.

கடந்த ஏப்ரல் 08, 2020 அன்று, மத்திய நிதி அமைச்சகம், கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில், சுமார் 1 லட்சம் வியாபாரங்கள் மற்றும் எம் எஸ் எம் இ நிறுவனங்கள் பயன் அடையும் விதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி & சுங்க வரி ரீஃபண்ட் பாக்கிகளை கொடுக்க முடிவு செய்தது. அப்படி நிதி அமைச்சகம் ரீஃபண்ட் வழங்க அனுமதி கொடுத்த தொகை சுமாராக 18,000 கோடி ரூபாய் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி & சுங்க வரி ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு தேவையான டாக்குமெண்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை, நேரடியாக அலுவலகங்களுக்கு வந்து சமர்ப்பிக்கச் சொல்வதை தவிர்க்கவும், அதற்கு பதிலாக அனைத்து விவரங்களையும், அதிகார பூர்வ மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளுமாறும், மத்திய மறைமுக வரிகள் ஆணையம், தன் அதிகாரிகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார்களாம்.

இந்த கடினமான காலங்களில் வரி செலுத்துவோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நோக்கில் நிலுவையில் உள்ள பணத்தைத் ரீஃபண்ட் வழங்கும் வேலைகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From April 8 Rs 11052 crore GST refund claims cleared

From April 8th 2020 till 24th May 2020 around Rs.11,052 crore refunds cleared the central board of indirect taxes said.
Story first published: Monday, May 25, 2020, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X