ஏடிஎம், கேஸ், வங்கி கட்டணங்கள்.. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ள முக்கிய மாற்றங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதத்தில் பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஆக இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

 

இதனால் சமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு? சாதகம் என்னென்ன? என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

குறிப்பாக வங்கி தொடர்பான மாற்றங்கள், சமையல் கேஸ் விலை, இது தவிர இன்னும் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சிலிண்டர் விலையில் மாற்றம்

சிலிண்டர் விலையில் மாற்றம்

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றப்படுவது வழக்கம். ஏற்கெனவே சிலிண்டர் விலை புதிய உச்சங்களை தொட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை மட்டும் இன்று 73.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படவில்லை.

இனி காத்திருக்க வேண்டாம்

இனி காத்திருக்க வேண்டாம்

இனி மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கான ரிசர்வ் வங்கி தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியமைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றங்கள் இன்று முதல் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இனி எல்லா நாட்களும் சேவைகள்
 

இனி எல்லா நாட்களும் சேவைகள்

நீங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். அதாவது NACH வசதிகள் இப்போது முழு வாரமும் கிடைக்கும்.

காத்திருக்க வேண்டிய அவசியம்

காத்திருக்க வேண்டிய அவசியம்

பொதுவாக பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் சம்பளதாரர்கள் தங்கள் சம்பளக் கணக்கில் வரவுக்காக அடுத்த வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் இனி அப்படி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பயனுள்ளதாக இருக்கும்

பயனுள்ளதாக இருக்கும்

இனி சம்பதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் 1ல் இருந்து சம்பளம், ஓய்வூதியம், இ.எம்.ஐ கட்டணம், இப்போது வார இறுதி நாட்களிலும் பெற முடியும். செலுத்த முடியும். NACH என்பது NPCIல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டமாகும். ஆக இன்று முதல் இந்த சேவை விடுமுறை நாட்களிலும் இந்த சேவை இயங்கும் என்பதால், பலருக்கும் மிக உபயோகமானதாக இருக்கும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய கட்டண மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் கேஸ் டிரான்ஸாக்சன், காசோலைக்கான கட்டண விகிதங்கள், ஏடிஎம் கட்டணங்கள் என பலவும் மாறியுள்ளன. இன்று வங்கி விடுமுறை ஆதலால் நாளையில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரலாம் என்பதால் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளார்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

ICICI -என்னென்ன மாற்றங்கள்

ICICI -என்னென்ன மாற்றங்கள்

குறிப்பாக பண பரிவர்த்தனை கட்டணங்கள் (Sum total deposits and withdrwals) என்று பார்க்கும்போது, மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணமாகும்.

இதே ரெகுலர் சேமிப்பு கணக்கில் ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பர்வர்த்தனையில், 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150)

இதே மற்ற கிளைகள் எனில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை. 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டனமாகும். (subject to a minimum of Rs 150)

ICICI - மூன்றாம் நபர் பரிவர்த்தனை

ICICI - மூன்றாம் நபர் பரிவர்த்தனை

ஐசிஐசியின் ரெகுலர் சேமிப்பு கணக்கில் மூன்றாம் நபர் பரிவர்த்தனைக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் அனுமதியில்லை.

இதே மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.

ICICI - சம்பள கணக்கில் என்ன மாற்றம்

ICICI - சம்பள கணக்கில் என்ன மாற்றம்

சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கில் (Sum total deposits and withdrwals), மாதத்திற்கு 4 இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதே தொகை வரம்பு என எடுத்துக் கொண்டால் ((Sum total deposits and withdrwals) ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பரிவர்த்தனையில் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150)

மற்ற கிளைகளில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை. 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டனமாகும். (subject to a minimum of Rs 150)

ICICI - சம்பள கணக்கில் மூன்றாம் தரப்பு கட்டணம்

ICICI - சம்பள கணக்கில் மூன்றாம் தரப்பு கட்டணம்

ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய அனுமதியில்லை.

மற்ற சேமிப்பு கணக்குகளை போலவே, மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.

ICICI - கோல்டு (Gold Privilege Savings / Salary Accounts)

ICICI - கோல்டு (Gold Privilege Savings / Salary Accounts)

இந்த சம்பள கணக்கில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த கணக்கில் அதற்கு மேற்கொண்டு பரிவர்த்தனை செய்யும்போது 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தொகை வரம்பில் எடுத்துக் கொண்டால், ஹோம் பிரான்ச் அல்லது மற்ற கிளைகளில் 1 லட்சம் ரூபாய் வரையில், ஒரு மாதத்திற்கு இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இதே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மூன்றாம் தரப்பினருக்கும் பொருந்தும். (subject to a minimum of Rs 150)

ICICI - ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

ICICI - ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகும். (inclusive of financial and non-financial) இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாகும்.

அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் கட்டணமாகும்.

ICICI -செக் புக் கட்டணம்

ICICI -செக் புக் கட்டணம்

ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட்ட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேரும்.

Post Office - ஜீரோ பேலன்ஸ் இருப்பு

Post Office - ஜீரோ பேலன்ஸ் இருப்பு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சில சேவைகளைக்கு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் அதிகரிப்பானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது கேஸ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணமாக 20 ரூபாயும் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

Post Office - மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள்

Post Office - மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள்

ப்ரீபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் இதன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கட்டணமாக 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மொபைல் பில்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஒவ்வொரு கட்டணங்களுக்கும், 20 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Post Office டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ்

Post Office டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ்

போஸ்ட்பேமெண்ட் வங்கியின் டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கு (Doorstep Banking Charges) முன்னதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு முறை சேவைக்காக அழைக்கும்போதும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள்

பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள்

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது அதன் சேவையில் இருந்து சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Account), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (public provident fund), தொடர் வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் உள்ளிட்ட பல சேவைகளுக்கும் பணம் செலுத்தும்போது 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள்

ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள்

வாடிக்கையாளர்கள் IPPB கணக்கிற்குள் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 20 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கபடும். இதே மற்ற வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டால் 20 ரூபாய் + ஜிஎஸ்டி DSB கட்டணமும் வசூலிக்கப்படும்.

கியூஆர் கோட்டினை மீண்டும் (QR code) வழங்க 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். யுபிஐ சேவைக்கும் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஏடிஎம் கட்டணங்கள்

ஏடிஎம் கட்டணங்கள்

ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் சில மாற்றங்களை ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால் விரைவில் ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து பணத்தை எடுக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏடிஎம் இயந்திரங்களை பயன்பாட்டில் வைத்திருக்கவும், இந்த இயந்திரங்களை முறையாக பராமரிக்க ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?

இதில் நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15-லிருந்து, ரூ.17-ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான (non-financial transactions) பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆக இதனையும் வாடிக்கையாளர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது.

இந்த கட்டண விகிதங்கள் பலவும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இது ஏற்கனவே விலைவாசி உயர்வு என்பது மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்து வரும் நிலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From LPG to ATM rules; key changes that will impact your money from august 1, 2021

From LPG to ATM few rules will come into effect from today, how will impact your personal finance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X