பியூச்சர் குழுமத்தில் அமேசானுடனான ஒப்பந்தத்தினை சிசிஐ ரத்து செய்துள்ளது.
இது நாட்டின் மிகப்பெரிய பில்லியனரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனலாம்.
சிசிஐ-ன் இந்த அறிக்கையினால் அமேசானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனலாம்.
எதற்கு எவ்வளவு கட்டணம்.. எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு.. இதனையும் தெரிந்து கொள்ளுங்க..!

20% மேலாக ஏற்றம்
இதற்கிடையில் தான் பியூச்சர் குழும பங்கின் விலையானது 20% வரையில் ஏற்றம் கண்டுள்ளது. இது சிசிஐ அமைப்பு அமேசான் உண்மையை மறைத்து பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதனால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.

அமேசானுக்கு அபராதம்
இரண்டு வருடத்திற்கு மேலான இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பர்ட்ட பிரச்சனைகளுக்கும் மத்தியில், இந்த இ-காமர்ஸ் ஜாம்பவானுக்கு 202 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் பியூச்சர் லைஃப்ஸ்டைல் பேஷன்ஸ் பங்கின் விலையானது 20% மேலாக அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது.

அப்பர் சர்க்யூட்
இதே பியூச்சர் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் 19.99% ஏற்றத்திலும், பியூச்சர் ரீடெயில் பங்கின் விலையானது 19.92% ஏற்றத்திலும், பியூச்சர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 19.93% ஏற்றம் கண்டும், இதே பியூச்சர் கன்சியூமர் பங்கின் விலையானது 19.91% ஏற்றம் கண்டும் முடிவடைந்துள்ளது. மொத்தத்தில் பியூச்சர் குழுமத்தில் உள்ள பங்கின் விலையானது அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது.

ஒப்பந்தம்
பிக் பஜார் உட்பட பியூச்சர் குழுமத்திற்கு சொந்தமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், குடோன்களை 24,713 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் குழுமம், கடந்த ஆண்டு வாங்கியது. இதுதொடர்பாக அப்போது ரிலையன்ஸ் குழுமம், பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்று தெரிவித்தது.

வழக்கு
அதனைத் தொடர்ந்து தான் பியூச்சர் குழுமத்திற்கு எதிராக, ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதை எதிர்த்து அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழங்க்கில் வெற்றி பெற்றது அமேசான். ஆனால் இந்த தீர்ப்பு இந்தியாவில் செல்லாது எனக் கூறி பியூச்சர் குழுமம் அமேசானுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.