டிஜிட்டல் பேமெண்ட் செய்ய இனி இண்டர்நெட் தேவையில்லை.. இந்திய கிராமங்களுக்காகப் புதிய சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் இதேவேளையில் பின்டெக் நிறுவனங்கள் புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்து நிதியியல் பரிமாற்றங்களை எப்போதும் இல்லாத வகையில் எளிமையாக்கி வருகின்றன.

 

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி பின்டெக் நிறுவனங்களுக்காகக் கட்டுப்பாடுகளை வடிவமைத்த ஒரு வருட காலத்தில் இந்திய கிராமங்கள் மற்றும் சிறு டவுன் பகுதிகள், இண்டர்நெட் வசதி இல்லாத இடங்கள், இண்டர்நெட் சேவையைப் பெற முடியாத மக்களுக்குப் பெரிய அளவில் பயன்படும் ஆப்லைன் பேமெண்ட் சேவையை 2 நிறுவனங்கள் பரிசோதனை செய்து வருகிறது.

இவ்விரு நிறுவனங்களின் சேவை அறிமுகம் நாட்டின் டிஜிட்டல் பேமெண்ட் தளம் பல மடங்க வளர்ச்சி காண்பது மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் டிஜிட்டல் நிதியியல் சேவை கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..?

eRupaya செயலி

eRupaya செயலி

ஜெய்ப்பூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் நேச்சுரல் சப்போர்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் eRupaya செயலியை உருவாக்கிய வருகிறது. இந்தச் செயலி இண்டர்நெட் இல்லாமல் ஆப்லைன் மூலம் பேமெண்ட் செய்யும் திறன் கொண்ட Near-Field Communication - NFC என்னும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது.

பரிமாற்றங்கள்

பரிமாற்றங்கள்

இந்தச் செயலி ஃப்ரிபெய்டு கார்டு NFC மற்றும் பாயின்ட் ஆப் சேல்ஸ் NFC முறையில் ஆப்லைன் Person-to-Merchant (P2M) பரிமாற்றங்கள் அதாவது வாடிக்கையாளர் - வர்த்தகர்கள் இடையில் செய்யப்படும் பணப் பரிமாற்றம் மற்றும் இதர டிஜிட்டல் பேமெண்ட்களையும் செய்ய முடியும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

PaySe செயலி
 

PaySe செயலி

இதேபோல் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Nucleus Software Exports நிறுவனம் PaySe என்னும் செயலியைப் பரிசோதனை செய்து வருகிறது.

இந்தச் செயலி இந்திய கிராம மக்களின் பயன்பாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

உதவி குழு

உதவி குழு

இந்தச் செயலி இந்திய கிராமங்களில் பணப் பரிமாற்றத்தை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியில் Self Help Groups (SHG) வாயிலாக ஆப்லைன் பேமெண்ட்-ஐ மக்கள் மத்தில் கொண்டு சேர்க்கும் முறையில் பரிசோதனை செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆப்லைன் பேமெண்ட் சேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் சுமார் 32 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது. இதில் 6 நிறுவனங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அமைத்துள்ள புதிய Sandbox கட்டுப்பாட்டு ஆணையம் மூலம் நிதியியல் துறையில் புதுமைகளை ஆய்வு செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gaming changing offline epayment solutions for Indian remote locations

Gaming changing offline epayment solutions for Indian remote locations
Story first published: Thursday, November 19, 2020, 21:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X