புதிய டிவிஸ்ட்.. அம்பானியை விட அதிகம் சம்பாதித்த அதானி, அசிம் பிரேம்ஜி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 முடியும் வேளையில் இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. ஆம் வழக்கம் போல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்ப உறுப்பினர்கள் உடன் முதல் இடத்தில் இருந்தாலும், இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது, முதல் இடத்திற்கு அம்பானி உடன் போட்டிப்போடும் கௌதம் அதானி தான்.

 

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி..! ஆசியாவின் பெரும் பணக்காரர்..!

 கௌதம் அதானி

கௌதம் அதானி

இந்தியாவில் 2வது பெரும் பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 41.5 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் முகேஷ் அம்பானி வெறும் 13 பில்லியன் டாலர் மட்டுமே இந்த ஆண்டு சம்பாதித்துள்ளார்.

 டாப் 10 பணக்காரர்கள்

டாப் 10 பணக்காரர்கள்

இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் மட்டும் அல்லாமல் யாராலும் 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு ஓரே வருடத்தில் வளர்ச்சி அடையவில்லை. இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் மத்தியில் புதிய ஒரு வருட வரலாற்று வளர்ச்சி சாதனையைக் கௌதம் அதானி படைத்துள்ளார்.

 கௌதம் அதானி சொத்து மதிப்பு
 

கௌதம் அதானி சொத்து மதிப்பு

2021ஆம் ஆண்டு மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து மொத்த சொத்து மதிப்பின் அளவு 75.3 பில்லியன் டாலராக உள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகளின் 245% வளர்ச்சியும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளின் 288% வளர்ச்சியும், அதானி டோட்டல் கேஸ் பங்குகளின் 351.42% வளர்ச்சியும் தான் காரணம்.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-யின் சொத்து மதிப்பு இந்த வருடம் 13 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்து மொத்த சொத்து மதிப்பு 89.7 பில்லியன் டாலராக உள்ளது.

 அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

மேலும் முகேஷ் அம்பானியை விடவும் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அசிம் பிரேம்ஜி-யின் சொத்து மதிப்பு இந்த வருடம் 15.8 பில்லியன் டாலர் வளர்ச்சி அடைந்து 41.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

இதேபோல் டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிஷன் தமனியின் சொத்து மதிப்பு 9.51 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து 24.4 பில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது.

 கௌதம் அதானி - முகேஷ் அம்பானி

கௌதம் அதானி - முகேஷ் அம்பானி

இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாகுபாலி படத்தில் பல்வால்தேவன்-க்கு ராஜா பதவி கொடுக்கப்பட்டாலும் மகேந்திர பாகுபலி-க்கு அதிக ஆதரவு இருக்கும். இதேபோலத் தான் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்தாலும் அதிகம் சம்பாதித்தது கௌதம் அதானி தான்.

 இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2021

இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2021

  • முகேஷ் அம்பானி - 90.5 பில்லியன் டாலர்
  • கௌதம் அதானி & குடும்பம் - 78.2 பில்லியன் டாலர்
  • சிவ நாடார் - 31.8 பில்லியன் டாலர்
  • ராதாகிஷன் தமானி - 22.6 பில்லியன் டாலர்
  • லட்சுமி மிட்டல் - 18.8 பில்லியன் டாலர்
  • சைரஸ் பூனவல்லா - 17.7 பில்லியன் டாலர்
  • சாவித்ரி ஜிண்டால் & குடும்பம் - 17.2பில்லியன் டாலர்
  • குமார் பிர்லா - 16.3 பில்லியன் டாலர்
  • உதய் கோடக் - 14.8 பில்லியன் டாலர்
  • திலீப் ஷங்வி - 14.8 பில்லியன் டாலர்
  • சுனில் மிட்டல் & குடும்பம் - 14.0 பில்லியன் டாலர்
  • அசிம் பிரேம்ஜி - 11.3 பில்லியன் டாலர்
  • குஷால் பால் சிங் - 9.9 பில்லியன் டாலர்
  • பஜாஜ் சகோதரர்கள் - 9.3 பில்லியன் டாலர்
  • அஸ்வின் டானி & குடும்பம் - 9.0 பில்லியன்டாலர்
  • முரளி திவி & குடும்பம் - 8.9 பில்லியன் டாலர்
  • கோபிகிஷன் தமானி - 8.9 பில்லியன் டாலர்
  • குல்தீப் சிங் & குர்பச்சன் சிங் திங்ரா - 8.8 பில்லியன் டாலர்
  • ராகுல் பஜாஜ் - 8.2 பில்லியன் டாலர்
  • பெனு கோபால் பங்கூர் - 8.2 பில்லியன் டாலர்
  • மகேந்திர சோக்சி & குடும்பம் - 7.0 பில்லியன்டாலர்
  • ஃபால்குனி நாயர் - 7.0 பில்லியன் டாலர்
  • ஹஸ்முக் சுட்கர் & குடும்பம் - 6.5 பில்லியன் டாலர்
  • ராகேஷ் ஜுன்ஜுன்வாலா - 6.0 பில்லியன் டாலர்
  • மங்கள் பிரபாத் லோதா - 5.5 பில்லியன் டாலர்
  • கபில் & ராகுல் பாட்டியா - 5.4 பில்லியன் டாலர்
  • ரவி ஜெய்ப்ரியா - 5.4 பில்லியன் டாலர்
  • பங்கஜ் படேல் - 5.3 பில்லியன் டாலர்
  • அஜய் பிரமல் - 5.1 பில்லியன் டாலர்
  • எம்.ஏ.யூசுப் அலி - 5.0 பில்லியன் டாலர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani, Azim Premji earns more than Mukesh Ambani in 2021

Gautam Adani, Azim Premji earns more than Mukesh Ambani in 2021 புதிய டிவிஸ்ட்.. அம்பானியை விட அதிகம் சம்பாதித்த அதானி, அசிம் பிரேம்ஜி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X