அதானியின் அசத்தல் ட்வீட்.. 5,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள்.. கிரையோஜெனிக் டேங்குகள் இறக்குமதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று கொரோனா வைரஸ் பரவலுக்கும் மத்தியிலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது தான்.

 

சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளின் தேவையும் அதிகமாக தேவைப்படும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஒரு புறம் ஆக்சிஜன், தடுப்பு மருந்து என வாங்கிக் கொண்டு வருகின்றன.

ரிலையன்ஸ் ஆக்சிஜன் சப்ளை

ரிலையன்ஸ் ஆக்சிஜன் சப்ளை

இதற்கிடையில் பல முன்னணி கார்ப்பரேட்டுகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. கடந்த வாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம ஒரு நாளைக்கு 700 டன்னுக்கு மேல் மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் 70,000 மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த 700 டன்னை 1000 டன்னாக உயர்த்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா குழுமம் தானம்

டாடா குழுமம் தானம்

இதே போல டாடா குழுமமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக, 24 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் மூலம், ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த கன்டெய்னர்கள் மூலம், ஒன்றுக்கு அதிகபட்சம் 61,620 லிட்டர் வரை கொண்டு வர முடியும் என கூறப்படுகிறது. இது விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படலாம் என்றும் தெரிகிறது.

கவுதம் அதானி ட்வீட்
 

கவுதம் அதானி ட்வீட்

இது தவிர டாடா ஸ்டீல், ஜேஎஸ்பிஎல், ஐடிசி லிமிடெட், உள்ளிட்ட பல குழும நிறுவனங்களும் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் மற்றொரு பில்லியனர் ஆன கவுதம் அதானி, சவுதி அரேபியாவில் இருந்து கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் மற்றும் 5000 ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக குஜராத்துக்கு ஆக்சிஜன்

முதல் கட்டமாக குஜராத்துக்கு ஆக்சிஜன்

இது கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டத்தின் மத்தியில், அதானியின் இந்த முயற்சியும் இணைந்துள்ளது. முதல் கட்டமாக 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரம்பிய நான்கு ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் டேங்குகள், சவுதியின் தம்மத்தில் இருந்து குஜராத்தின் முந்தராவுக்கு சென்று கொண்டுள்ளது. இது தவிர 5000 மருத்துவ தர ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இந்த குழு பாதுகாத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் சப்ளை செய்ய ஏற்பாடு

விரைவில் சப்ளை செய்ய ஏற்பாடு

இதற்காக சவுதி அரேபியாவின் இந்திய தூதர் ஆசாஃப் சயீத்துக்கு கவுதம் அதானி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சென்று கொண்டுள்ள ஆக்சிஜனை விரைவாக விநியோகிக்க ஒரு குழு ஏற்பாடு செய்துள்லதாகவும் கூறியுள்ளார். குஜராத்தின் கட்ச் நகரில் தனது குழு ஒவ்வொரு நாளும், 1500 சிலிண்டர்களை மருத்துவ ஆக்சிஜனுடன் தேவையான இடங்களில் சப்ளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gautam adani importing cryogenic tanks, 5000 oxygen cylinders from Saudi

Adani latest updates.. gautam adani importing cryogenic tanks, 5000 oxygen cylinders from Saudi
Story first published: Sunday, April 25, 2021, 17:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X