அடிமாட்டு விலைக்கு அரசின் விமான நிலையத்தை வாங்கும் கௌதம் அதானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானியை விடவும் வேகமாக வளர்ந்து வரும் கௌதம் அதானியின் அதானி குழுமம் சமீபத்தில் தனக்கு முன் அனுபவம் இல்லாத பல துறையில் புதிய வர்த்தகத்தைத் துவங்கியது மட்டும் அல்லாமல், அத்துறையில் அரசுக்கும் சொந்தமான சொத்துக்களையும், தனியாருக்கு சொந்தமான நிறுவன பங்குகளையும் அதிகளவில் வாங்கிக் குவித்தது.

 

7Eleven இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி.. 2 நாளில் புதிய கடை..!

விமான நிலையம் நிர்வாகம்

விமான நிலையம் நிர்வாகம்

அதில் மிக முக்கியமானது விமான நிலையம் நிர்வாகம், மோடி தலைமையிலான மத்திய அரசு விமானச் சேவை நிறுவனம், விமான நிலையங்களை லாபகரமாக நடத்த முடியாத காரணத்தால் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

இதில் அதிகமான விமான நிலையத்தைக் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. அப்படிக் கைப்பற்றியுள்ள விமான நிலையம் மிகவும் குறைவான விலைக்குக் கைப்பற்றியுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

6 விமான நிலையம்
 

6 விமான நிலையம்

அதானி குழுமம் கைப்பற்றியுள்ள 6 விமான நிலையத்தில் 3 விமான நிலையங்கள் அதாவது மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு ஏல விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விலையை விடவும் குறைவான தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஏலத்தில் வெற்றி

ஏலத்தில் வெற்றி

2018ல் இந்தியாவில் 6 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்புத் தேர்வு செய்து பிப்ரவரி 2019ல் ஏலத்தில் அதானி குழுமம் வெற்றிபெற்றது. அன்று முதல் அதானி குழுமம் எதிராகப் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.1,330 கோடிக்கு வெறும் ரூ.499.84 கோடி

ரூ.1,330 கோடிக்கு வெறும் ரூ.499.84 கோடி

இதன் படி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்புத் தற்போது பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 3 விமான நிலையத்தின் சொத்துக்களைக் கைப்பற்ற அதானி குழுமம் 1,330 கோடி ரூபாய்க் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கௌதம் அதானி வெறும் 499.84 கோடி ரூபாய்க்கு 3 விமான நிலையத்தையும் கைப்பற்றியுள்ளார்.

PPPAC திட்டம்

PPPAC திட்டம்

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் PPPAC திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக இந்த 3 விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட போது இதன் மதிப்பு 1,330 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத்

மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத்

தற்போது அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் வெறும் 499.84 கோடி ரூபாய்க்கு மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களைக் கைப்பற்றியுள்ளார்.

மதிப்பீடும் வித்தியாசமும்

மதிப்பீடும் வித்தியாசமும்

PPPAC அமைப்பின் கணக்கீடு படி மங்களூரு விமான நிலையத்தின் மதிப்பு 363 கோடி ரூபாய் அதானி குழுமம் வெறும் 74.5 கோடி ரூபாய்க்கும், லக்னோ விமான நிலையத்தின் 583 கோடி ரூபாய் அதானி குழுமம் வெறும் 147.93 கோடி ரூபாய்க்கும், அகமதாபாத் விமான நிலையத்தின் மதிப்பு 384 கோடி ரூபாய், ஆனால் அதானி வெறும் 277.41 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் அமைப்புக் குற்றம் சாட்டி பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அரசுக்கு நஷ்டம்

அரசுக்கு நஷ்டம்

இந்த 3 விமான நிலையத்தில் மட்டும் சுமார் 830.16 கோடி ரூபாய் அளவிலான தொகை குறைவாக அதானி குழுமம் பெற்றுள்ளது. இது அரசுக்கு பெரும் நஷ்டம் எனவும், அதானி குழுமத்திற்கு அதிகப்படியான சலுகை அளிக்கப்பட்டு அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani paid Rs.499.84 crore instead of Rs.1,330 crore for 3 airports says AAI union

Gautam Adani paid Rs.499.84 crore instead of Rs.1,330 crore for 3 airports
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X