FASTag இல்லையா..? 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் 1 முதல் எல்லா வாகனங்களும் பாஸ்ட்டேக்-ஐ கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இதனால் வாகனங்கள் வைத்துள்ள அனைவரும் FASTag அவசர அவசரமாகப் பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் தடையில்லா போக்குவரத்துத் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தேசிய நெடுஞ்சாலை துறை இந்தக் கட்டாயப் பாஸ்ட்டேக் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 1 முதல் FASTag இல்லாத வாகனங்கள் சுங்க சாவடியில் இருக்கும் FASTag வாகனங்கள் செல்லும் நுழைவில் சென்றால் 2 மடங்கு அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைக் கட்டாயம் சுங்க சாவடியில் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

30,000 டன் வெங்காயம் வீணா போச்சு..! அரசு அமைப்பின் அலட்சியம்..!

2 மடங்கு அதிகக் கட்டணம்

2 மடங்கு அதிகக் கட்டணம்

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், டிசம்பர் முதல் இந்தியாவின் அனைத்து சுங்க சாவடியிலும் FASTag கொண்ட வாகனங்கள் எவ்விதமான நிறுத்தமும் இன்றிச் செல்ல வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டத்தை முழுமையாகவும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று டிசம்பர் 1 முதல் FASTag இல்லாத வாகனங்கள் சுங்க சாவடியில் இருக்கும் FASTag வாகனங்கள் செல்லும் நுழைவில் சென்றால் 2 மடங்கு அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதைக் கட்டாயம் அனைத்து சுங்க சாவடியிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது..?

சட்டம் என்ன சொல்கிறது..?

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன் படி, அனைத்து சுங்க சாவடியிலும் FASTag வாகனங்கள் செல்வதற்காகப் பிரத்தியேக நுழைவு அமைக்கப்பட வேண்டும். இந்த நுழைவில் FASTag இல்லாத வாகனங்கள் நுழைந்தால் இரட்டிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான், ஆனால் பெரிதாக யாரும் கடைப்பிடிப்பது இல்லை. இதைத் தற்போது உறுதியாகக் கடைப்பிடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

ஹைபிரிட் நுழைவு
 

ஹைபிரிட் நுழைவு

தற்போதைய நிலையில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து சுங்கச் சாவடியிலும் ஒரு ஹைபிரிட் நுழைவு இருக்கும். இதில் FASTag உள்ள வாகனங்களும், FASTag இல்லாத வாகனங்களும் நுழையும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது எனவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100 சதவீதம் எலக்ட்ரானிக் டோல் பிளாசா

100 சதவீதம் எலக்ட்ரானிக் டோல் பிளாசா

டிசம்பர் 15 வரையில் டெல்லி, என்சிஆர் பகுதியில் 100 சதவீதம் எலக்ட்ரானிக் டோல் பிளாசா இயங்கி வருகிறது. பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முழுவீச்சில் இந்தப் பணிகளைச் செய்து வருகிறது. டிசம்பர் 15 வரையில் நாடு முழுவதும் 80 சதவீத டோல் பிளாசாகள் 100 சதவீதம் எலக்ட்ரானிக் முறையில் இயங்குவதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து டோல் பிளாசாகளும் 100 சதவீதம் எலக்ட்ரானிக் முறையில் இயங்க பணிகள் நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get ready to pay double at Toll: No FASTags Vehicles

Come December, owners of vehicles without FASTags will have to cough up twice the normal rate at toll gates as the government gears up to achieve seamless road travel nationwide by making collections electronic.“If you go into the electronic toll collection lane without a FASTag, you pay twice the toll.” “This is something we are going to implement very strictly,” the official said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more