கீதா கோபிநாத்-க்கு மீண்டும் உயர் பதவி.. IMF செம அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார், இவருடைய பணிக் காலம் ஜனவரி 2022ல் முடிய உள்ள காரணத்தால் ஐபிஎம் அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பணியில் சேர உள்ளதாக அறிவித்தார்.

 

இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை வடிவமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் பல நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி பணிகளுக்காகக் கடன் வழங்கும் பணிகளும் செய்து வருகிறது.

கீதா கோபிநாத்
 

கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் கொள்கை ஆகியவற்றைக் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்ற கீதா கோபிநாத் வெளியேறும் அறிவிப்புச் சோகத்தை ஏற்படுத்தியது.

முதல் துணை நிர்வாகத் தலைவர்

முதல் துணை நிர்வாகத் தலைவர்

இந்நிலையில் ஐஎம்எப் அமைப்புக் கீதா கோபிநாத்-ஐ முதல் துணை நிர்வாகத் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதிவியல் இருந்த Geoffrey Okamoto வெளியேறும் காரணத்தால் தற்போது கீதா கோபிநாத் இப்பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார். முதல் துணை நிர்வாகத் தலைவர் என்பது ஐபிஎம் அமைப்பில் டாப் 2வது பதவி.

கிறிஸ்டலினா ஜார்ஜீவா

கிறிஸ்டலினா ஜார்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரியான கிறிஸ்டலினா ஜார்ஜீவா-வுக்கு அடுத்தபடியாகவும், இவருக்குக் கீழ் இருக்கும் முதல் அதிகாரியாகவும் கீதா கோபிநாத் பணியாற்ற உள்ளார். இது கீதா கோபிநாத்-க்குப் பதவி உயர்வாக உள்ளது. இதன் மூலம் முறையாகப் பெண்கள் தலைமையில் ஐஎம்எப் இயங்குகிறது.

மைசூர் டூ ஐஎம்எப்

மைசூர் டூ ஐஎம்எப்

1971ஆம் ஆண்டு மலையாள பெற்றோர்களுக்கு மகளாக மைசூரில் பிறந்த கீதா கோபிநாத், கொல்கத்தாவில் பள்ளியும், டெல்லி லேடி ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் மற்றும் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

 கீதா கோபிநாத் பிஹெச்டி பட்டம்

கீதா கோபிநாத் பிஹெச்டி பட்டம்

2001ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கீதா கோபிநாத் பிஹெச்டி பட்டமும் பெற்றார், அதன் பின்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். உலகிலேயே மிதப்புத் தக்க கல்லூரியாக அறியப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்-க்கு அடுத்து 3வதாக ஒரு இந்தியர் பணியாற்றுகிறார் என்றால் அது கீதா கோபிநாத் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gita Gopinath to be first deputy managing director, IMF in surprise move

Gita Gopinath to be first deputy managing director, IMF in surprise move கீதா கோபிநாத்-க்கு மீண்டும் உயர் பதவி.. IMF செம அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X