பெரு நிறுவனங்கள், பணக்காரர்கள் மீது கூடுதல் வரி.. அம்பானியும், அதானியும் பாவம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இந்நிலையில் சாமானிய மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமலும், வர்த்தகத்தையும் பொருளாதார வளர்ச்சியை இழக்காமலும், அதிக வரி மற்றும் வருமானத்தை ஈர்க்க உலக நாடுகளுக்கு முக்கியமான வரி விதிப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இதுமட்டும் அல்லாமல் இந்த முடிவை அனைத்து நாடுகளும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு வர்த்தகம் இழப்பதையும் தவிர்க்க முடியும் என்று சர்வதேச கார்பரேட் வரி அமைப்பு தெரிவித்துள்ளது.

அப்படி என்ன பரிந்துரை.. வாங்கப் பார்ப்போம்..

ரூ 1 கோடி இன்சூரன்ஸ் பணம்! தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட வியாபாரி!

பெரு நிறுவனங்களுக்குச் செக்

பெரு நிறுவனங்களுக்குச் செக்

உலக நாடுகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் போட்டியில்லாமல் தனித்து அத்துறையில் ஆதிக்கம் செய்யும் நிறுவனங்கள் மீது அதிக வரியும், சிறிய நிறுவனங்கள், அதிகப் போட்டித்தன்மை கொண்ட துறையில் இருக்கும் நிறுவனங்கள் மீது குறைந்த வரியும் விதிக்கும் போது அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

நாட்டின் வர்த்தகமும் அதிகரிக்கும், வரி வருமானமும் அதிகரிக்கும் எனச் சர்வதேச கார்பரேட் வரி அமைப்பு தெரிவித்துள்ளது.

வரி வருமான பாதிப்பு

வரி வருமான பாதிப்பு

பெரிய ஈகாமர்ஸ் மற்றும் மருத்து நிறுவனங்கள் தவிர, பிற அனைத்து நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டில் மிகவும் மோசமான வருவாய் மட்டுமே ஈட்டும். இதனால் கார்ப்பரேட் வரியில் அதிகளவிலான பாதிப்பு ஏற்படும். மேலும் மக்கள் மத்தியில் நுகர்வின் அளவு குறைவாக இருப்பதால் விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டு வரி (மற்ற நாடுகளில்) குறையும்.

இதன் எதிரொலியாக உலக நாடுகளில் வரி வருவாய் இந்த வருடம் சராசரியாக 11.5 சதவீதம் வரையில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்பரேட் டாக்ஸ்
 

கார்பரேட் டாக்ஸ்

ஒவ்வொரு நாட்டிலும் ஏற்கனவே பெரும் நிறுவனங்கள் அரசிடம் வரியைக் குறைக்கவும், மீட்டெடுப்பு நிதியை கோரியும் வரும் நிலையில், இது கண்டிப்பாக வர்த்தகச் சந்தையில் போட்டியைக் குறைந்து வெளிநாடுகளுக்கு வர்த்தகம் செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக் கார்ப்பரேட் வரியை அதிகளவில் குறைந்து ஆசியாவிலேயே மிகவும் குறைவான வரி எனப் பெயரையும் வாங்கியது. இந்நிலையில் இந்தியாவில் மேலும் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருமான வரிப் பாதிப்பு ஏற்படும்.

ஓரே வரி

ஓரே வரி

இதனால் அடுத்த சில காலாண்டுகளுக்கு உலகில் அனைத்து நாடுகளும் பெரும் நிறுவனங்கள் மீதான வரியைக் குறைக்காமல் வரி 10 முதல் 20 சதவீதம் வரையில் உயர்த்தி வல்லரசு நாடுகளுக்கு இணையான வரியை விதிக்கச் சர்வதேச கார்பரேட் வரி அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. அல்லது அனைத்து நாடுகளும் 25 சதவீதம் என நிலையான கார்பரேட் வரியை அடுத்த சில காலாண்டுகளுக்குக் கடைப்பிடிக்க ஆலோசனை கூறியுள்ளது.

இப்படிச் செய்வதன் மூலம் போட்டி இருக்காது, வர்த்தகம் ஒரு நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கும் செல்லவும் முடியாது.

டிஜிட்டல் சர்வீஸ் டாக்ஸ்

டிஜிட்டல் சர்வீஸ் டாக்ஸ்

உலக நாடுகள் progressive digital services tax முதல் அமலாக்கம் செய்ய வேண்டும். அதாவது விற்பனை அதிகமாகும் போது அதிக வரி, விற்பனை குறைவாக இருக்கும் போது குறைவான வரி என்கிற வகையில் டிஜிட்டல் சர்வீஸ்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

பணக்காரர்கள் மீதான வரி

பணக்காரர்கள் மீதான வரி

மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகப் பணக்காரர்கள் மீதான வரியை அனைத்து நாடுகளும் எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் 0.5 சதவீதம் உயர்த்த வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் மூலம் 1.17 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீடுகளை அரசுகளால் செய்ய முடியும்.

உலக மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் மக்கள் தான் இவர்கள் மீது 0.5 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது சரியா..? தவறா..?

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுமா..? சாமானியர்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் அடைய அடிப்படை. இப்படியிருக்கும் போது அவர்கள் மீது அதிக வரி விதித்தால் நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடையும்.

உதாரணமாக லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியாவில் பெட்ரோல் விலை திணமும் பெட்ரோல் விலையை உயர்த்தி அரசு அதிக வரி வருமானத்தைப் பார்த்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global Body Suggests ‘Google Tax’, Higher Rate On Monopolies During Pandemic

Higher corporate tax rate for large corporations in oligopolised sectors with high rates of return. Set a minimum effective corporate tax rate of 25% worldwide to stop base erosion and profit shifting. Introduce progressive digital services taxes. Publicise country by country reporting for all corporations benefitting from state support. Publish data on offshore wealth for adopting effective progressive wealth taxes on residents, and income tax rates on highest income taxpayers.
Story first published: Tuesday, June 16, 2020, 16:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X