முதல் முறையாக 100 டிரில்லியன் டாலர்.. உலகளாவிய பங்குச்சந்தை நிறுவனங்கள் சாதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முறையாக உலகளவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு 100 டிரில்லியன் டாலரை தொட்டுச் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும் பகுதி அமெரிக்கா மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது குறிப்பிடத்தக்கது.

அப்போ இந்தியாவின் நிலை என்ன..? டாப் 10 பட்டியலில் இந்தியா உள்ளதா..?

இந்தியாவின் முதல் செங்குத்து காடு 14 மாடி குடியிருப்பு

100.5 டிரில்லியன் டாலர்

100.5 டிரில்லியன் டாலர்

டிசம்பர் 5ஆம் தேதி வர்த்தகத்தில் உலக நாடுகளின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 100.5 டிரில்லியன் டாலர் அதாவது 7,400 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை முதல் முறையாக அடைந்துள்ளது. இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் பல நாடுகள் தவித்து வரும் நிலையிலும் இப்புதிய உச்சம் அடைந்துள்ளது.

மறக்க முடியாத மார்ச் சரிவு

மறக்க முடியாத மார்ச் சரிவு

கொரோனா பாதிப்புக் காரணமாக மார்ச் 24ஆம் தேதி உலகளாவிய பங்குச்சந்தை நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு சுமார் 61.6 டிரில்லியன் டாலர் அளவிற்குச் சரிந்த நிலையில் வெறும் 8.5 மாதத்தில் 100.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் 63 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெக் நிறுவனங்கள் ஆதிக்கம்

டெக் நிறுவனங்கள் ஆதிக்கம்

இந்த 63 சதவீத சந்தை மதிப்பீட்டு வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்து வருவது டெக் நிறுவனங்கள் தான், அதிலும் முக்கியமாகப் பேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அமெரிக்கா, சீனா, இந்தியா

அமெரிக்கா, சீனா, இந்தியா

உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பீட்டில் அமெரிக்கச் சந்தை நிறுவனங்கள் 41.6 டிரில்லியன் டாலர் மதிப்பில் முதல் இடத்தையும், 10.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் சீனா 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 2.4 டிரில்லியன் டாலர் அதாவது 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா, சீனா வளர்ச்சி

அமெரிக்கா, சீனா வளர்ச்சி

டாப் 10 சந்தை மதிப்பீடு கொண்டு நாடுகளில் இந்த வருடம் அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற 8 நாடுகளும் கொரோனா பாதிப்புக் காரணமாக மார்ச் மாதம் ஏற்பட்ட சரிவில் இன்னும் மீளவில்லை.

அமெரிக்கா சந்தை மதிப்பீடு

அமெரிக்கா சந்தை மதிப்பீடு

அமெரிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அதிகளவில் உயர முக்கியக் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் பிற துறை நிறுவனங்களைக் காட்டிலும் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம்.

இந்தக் கொரோனா பாதிப்புக் காலத்தில் வர்த்தகம் அதிகளவில் பாதிக்காத துறைகளில் டெக் முதல் இடத்தில் உள்ளது.

சீனா சந்தை மதிப்பீடு

சீனா சந்தை மதிப்பீடு

இதேபோல் கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பெரிய அளவில் முடங்கிய நிலையில் லாக்டவுன் தளர்வுகள் குறைந்த பின்பு உற்பத்தி பொருட்கள் அதிகம் தேவைப்பட்ட காலத்தில் சீன அதிகளவில் லாபத்தை அடைந்தது.

ஜப்பான் சந்தை மதிப்பீடு

ஜப்பான் சந்தை மதிப்பீடு

அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்திருப்பது ஜப்பான். 2020ஆம் ஆண்டுத் துவக்கத்தில் 6.3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் கொண்ட ஜப்பான் நிறுவனங்களின் மதிப்புத் தற்போது 6.8 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global listed companies Mcap touches 100 Trillion Dollar for the first time

Global listed companies Mcap touches 100 Trillion Dollar for the first time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X