வருமானம் இல்லை.. வேலையும் இல்லை.. மே 3 வரை சம்பளம் இல்லா விடுமுறை.. கோஏரின் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக விடுமுறை என்றாலே மக்கள் குதூகலிக்கும் நிலையில், இந்தமுறை கொரோனாவை காரணம் காட்டி அளிக்கப்பட்ட விடுமுறையால் பல நிறுவனங்களின் ஊழியர்களை வருத்ததத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

 

ஏனெனில் நாட்டில் கொரொனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில், விமானசேவையும் ரத்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் முன்னணி விமான நிறுவனமான கோஏர் நிறுவனம் அதிரடியான ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

லாக்டவுன் நீட்டிப்பு

லாக்டவுன் நீட்டிப்பு

நாட்டில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானங்களை மட்டும், அதிலும் குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டும் இயக்க விமான ஒழுங்குமுறை ஆணையம் DGCA அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக லாக்டவுன் செய்யப்பட்ட பின் ஏப்ரல் 14க்கு பிறகு நிச்சயம் விமான போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனாவினை கட்டுப்பட்டுத்த மத்திய அரசு மே3 வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது.

சம்பளம் இன்றி விடுமுறை

சம்பளம் இன்றி விடுமுறை

இந்த நிலையில் கோஏர் 5,500 ஒற்றைப்படை ஊழியர்களில் பெரும்பான்மையோரினை மே 3 வரை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு அறிவித்துள்ளது. ஏனெனில் லாக்டவுன் முடியும் வரை தனது முழு சேவையினையும் ரத்து செய்துள்ள நிலையில், இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சம்பளம் குறைப்பு & பணி நீக்கம்
 

சம்பளம் குறைப்பு & பணி நீக்கம்

மார்ச் மாதத்தில் வாடியா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தினை குறைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலேயே தனது மூத்த ஊழியர்களுக்கு 50% வரை சம்பள குறைப்பு செய்வதாக கூறியது. அதோடு அதன் வெளிநாட்டு விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அப்போது அறிவித்து இருந்தது.

விடுமுறைக்காக கலங்கும் ஊழியர்கள்

விடுமுறைக்காக கலங்கும் ஊழியர்கள்

அதுமட்டும் அல்லாது சம்பளம் இல்லா விடுமுறையும் சுழற்சி முறையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது நிலமை இன்னும் மோசமாகவே தற்போது மே மூன்று வரை சம்பளம் இல்லா விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. கோஏர் மட்டும் அல்ல இன்னும் பல நிறுவனங்களும் இப்படி தான் சம்பளம் இல்லா விடுமுறை அளித்து வருகிறது. இதிலிருந்து நாம் மீள ஒரே வழி கொரோனாவை விரட்டியடிப்பது தான்.. ஆக தனித்திருப்போம், விழித்திருப்போம்.. கொரோவை விரட்டியடிப்போம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Goair asks employees to go on leave without pay till may 3 amid lock down extension

Goair asked employees to go on leave without pay till may 3.
Story first published: Sunday, April 19, 2020, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X