தள்ளுபடி விலையில் கிடைக்கும் தங்கம்..வாங்கத்தான் தான் ஆளைக் காணோம்.இன்னும் தள்ளுபடி அதிகரிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கனால் மக்கள் பலியாகி வரும் நிலையில், பொருளாதாரம், இந்தியாவின் முதுகெலும்பாய் உள்ள பல வணிகங்களும் முடங்கி போயுள்ளன.

 

இதனால் மக்கள் இன்றும் கூட கையில் பணமில்லாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறம் மக்கள் கையில் பணப்புழக்கம் இன்மை. வேலையின்மை, வேலையிழப்பு என பாடாய் படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்கள் கையிலும் பணப்புழக்கம் என்பது அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரம், தங்கம் விற்பனையாளர்கள் நலிவடைந்துள்ள விற்பனையை அதிகரிக்க பல அதிரடியான தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

தள்ளுபடிகள் கைகொடுக்கவில்லை

தள்ளுபடிகள் கைகொடுக்கவில்லை

என்ன தான் ஜூவல்லரி நிறுவனங்கள் தள்ளுபடியை வாரி வழங்கி வந்தாலும், மக்கள் கையில் பணப்புழக்கம் இன்மையால் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் விற்பனையானது அவ்வளவாக அதிகரித்ததாக தெரியவில்லை. எனினும் சிங்கப்பூரில் தங்கத்தின் தேவையானது சற்று அதிகரித்து வருவதாகவே இடி செய்திகள் கூறுகின்றது.

விற்பனை அதிகரிக்கவில்லை

விற்பனை அதிகரிக்கவில்லை

தங்கம் விற்பனையானது மிக குறைந்த அளவு இருந்து வரும் நிலையில், தள்ளுபடிகள் அவுன்ஸூக்கு 32 டாலர்கள் வரை வழங்கப்பட்டது. இது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அதிகபட்சமாகும். அதிலும் இந்த விலையோடு, உள்நாட்டு விலையில் இறக்குமதி வரி 12.5% மற்றும் விற்பனை வரி 3% என அனைத்தும் சேரும் போது அது பெரியளவுக்கு கைகொடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் விற்பனை அதிகரிக்கவில்லை என்றே கூறலாம்.

வெறிச் சோடிக் காணப்படும் ஷோரூம்கள்
 

வெறிச் சோடிக் காணப்படும் ஷோரூம்கள்

சில மாநிலங்களில் தங்க நகை ஷோரூம்கள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், அவைகள் விற்பனை ஏதும் இன்றி வெறிச்சோடித் தான் காணப்படுகின்றன என்று கூறுகிறார் ஜே ஜே கோல்டு ஹவுஸ் ஹர்ஷத் அஜ்மேரா. இதற்கிடையில் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது தங்கம் இறக்குமதியானது 99 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

மீண்டும் மூடல்

மீண்டும் மூடல்

ஆக சில நகைக்கடைகள் தளர்வுகளினால் திறக்கப்பட்டபோதிலும், வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், மீண்டும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தியாவினை விட தங்கம் உபயோகத்தில் முதலிடம் வகிக்கும் சீனாவில், தேவை குறைவால், அங்கேயே அவுன்ஸ் தங்கத்துக்கு 11 - 14 டாலர் தள்ளுபடி வழங்கப்பட்டு வரப்படுவதாகவும், இது கடந்த வாரத்தில் 14 -18 டாலர்கள் வரை வழங்கப்பட்டதாகவும் இடி செய்திகள் தெரிவித்துள்ளது.

தேவை குறையும்

தேவை குறையும்

மேலும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தங்கத்திற்கான தேவை குறையும் என்று, ஹாங்காங்கை கொண்ட தளமாகக் கொண்ட விலைமதிப்பற்ற உலோக ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் தங்கத்தின் தேவையானது குறைந்த நிலையில், அவுன்ஸூக்கு 1681.75 - 1744.62 டாலர் வரையில் வர்த்தகம் ஆகியது.

அதிகளவிலான தள்ளுபடிகள்

அதிகளவிலான தள்ளுபடிகள்

இதே சிங்கப்பூரில் அதிகரித்த தேவை காரணமாக விலை அவுன்ஸூக்கு 1 - 1.5 டாலர்கள் வரை அதிகரித்தது. இது கடந்த வாரத்தில் 0.80 - 1.80 டாலர்கள் வரை வர்த்தகமாகியது. இதே ஜப்பான் தங்கமும் பாருக்கு 0.50 டாலர் சற்று அதிகமாகவே வர்த்தகமாகியது. எனினும் இந்தியாவில் அதிகளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், எனினும் வாங்கத்தான் ஆள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold dealers big offered the highest discounts, but they are mostly deserted

Gold jewellery dealers in India offered the highest discounts in about two months
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X