9 மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்திற்கு டிஸ்கவுண்ட்.. வாங்கத்தான் ஆளில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்கள், கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல இடங்களில் முடங்கியுள்ளனர்.

 

அதிலும் தற்போது பலரும் கிராமப்புறங்களில் தாக்கம் அடைந்து வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஒரு புறம் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அடிப்படை தேவைக்கே கஷ்டப்படும் நிலையில், அத்தியாவசியம் தவிர மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கின்றனர்.

தேவை சரிவு

தேவை சரிவு

இதனால் தங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களில் முதலீடு என்பது வெகுவாக குறைந்துள்ளது எனலாம். இதனால் தங்கத்தின் தேவையானது வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் சில பகுதிகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கம்

கொரோனாவின் தாக்கம்

அதோடு மக்கள் கைகளில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நகர்ப்புறங்களை விட, கொரோனாவின் தாக்கம் என்பது கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் தேவை என்பது மில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். இதற்கிடையில் தங்க டீலர்கள் தங்கத்திற்கு தள்ளுபடியை வாரி வழங்கி வருகின்றனர்.

தள்ளுபடியை வழங்கும் டீலர்கள்
 

தள்ளுபடியை வழங்கும் டீலர்கள்

இது 9 மாதங்களில் இல்லாதளவு மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தங்கத்திற்கு 12 டாலர்கள் வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. இந்த தள்ளுபடி விகிதம் கடந்த வாரத்தில் 10 டாலர்களாக இருந்தது. இந்த தள்ளுபடியானது கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுயில் இருந்து ஒப்பிடும்போது மிக அதிகம் என ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன.

விலையுடன் வரி விகிதமும்

விலையுடன் வரி விகிதமும்

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் விலையில் 10.75% இறக்குமதி வரி மற்றும் 3% ஜிஎஸ்டி வரி ஆகியவையும் அடங்கும். எப்படியிருப்பினும் தற்போது பல இடங்களில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தங்கத்தின் விலையில் இது எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் வெள்ளிகிழமையன்று முடிவில் கிட்டதட்ட 49,000 ரூபாய்க்கு அருகில் முடிவடைந்துள்ளது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1889 டாலர்களாக வர்த்தகமாகியது. தங்கத்தின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று பண்ணை அல்லாத வேலை வாய்ப்பானது 5,59,000 ஆக உள்ளது. இதனை நிபுணர்கள் 6,50,000 ஆக எதிர்பார்த்தனர். ஆக எதிர்பார்ப்பினை விட இது குறைந்துண்ணது. இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை மலிவாக்கும்.

பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்

பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்

இதற்கிடையில் அமெரிக்க பத்திர லாபம் 1.557% சரிவினைக் கண்டுள்லது. அதோடு விரைவான பொருளாதார வளர்ச்சி விகிதமானது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் ஊக்கத்தினை அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலையானது அதிக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

மொத்தத்தில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தங்கம் விலையானது டிஸ்கவுண்ட் விலையில் கிடைப்பது நல்ல விஷயம் தானே. லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் தங்கத்தினை வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold discounts in India at highest level in nine month

Gold discounts updates.. Gold discounts in India at highest level in nine month
Story first published: Sunday, June 6, 2021, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X