தங்க முதலீட்டாளருக்கு காத்திருக்கும் பொற்காலம்.. இந்த நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றே உள்நாட்டு ஆய்வாளர்கள் முதல் கொண்டு சர்வதேச ஆய்வாளர்கள் வரை கூறி வருகின்றனர்.

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையில் 30% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து புதிய உச்சத்தினை கண்டு வந்தது. எனினும் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக நடப்பு மாத தொடக்கம் முதல் கொண்டு தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்
 

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

ஏனெனில் கச்சா எண்ணெய் தேவையானது படு வீழ்ச்சி கண்டது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது நடப்பு ஆண்டில் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் காணப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 60 டாலர்களாக வர்த்தகமாகிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் மைனஸூக்கு சென்று திரும்பியது. எனினும் தற்போது 40 டாலர் என்ற விகிதத்தில் உள்ளது.

ஆயில் தேவை குறைவு

ஆயில் தேவை குறைவு

ஏனெனில் தொடர்ச்சியாக ஆயில் தேவையானது குறைவாகவே காணப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலையானது அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்படுகிறது. சொல்லப்போனால் தேவை குறைவானது, விலையினை கீழ் நோக்கிய அழுத்தத்திற்கு தள்ளுகிறது. எனினும் தற்போது பல நாடுகள் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் தளர்வுகளை அளித்துள்ளது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

இதற்கிடையில் இரண்டாம் அலையாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பாக புகலிடமாக விளங்கும் தங்கம் மற்றும் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதத்தில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவானது 2075 டாலரினை தொட்டது.

கமாட்டிட்டிகளும் நல்ல வாய்ப்பு
 

கமாட்டிட்டிகளும் நல்ல வாய்ப்பு

ஆனால் நிலவி வரும் நெருக்கடி நிலையானது இந்த இரண்டு கமாடிட்டிகளும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் நடுத்தர கால அளவில் தங்கம் மற்றும் எண்ணெய் விலைகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கச்சா எண்ணெய் விலையினை பொறுத்த விரைவில் ஏற்றம் இருக்காது.

தடுப்பூசி வரவு

தடுப்பூசி வரவு

ஏனெனில் தேவை விரைவில் மீட்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆக இது குறித்த கவலையும் நிலவி வருகின்றது. எனினும் அடுத்து ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக 2021ம் ஆண்டில் தடுப்பூசியானது சந்தைக்கு வந்தால், நிச்சயம் கச்சா எண்ணெய் விலையில் அது பெரும் மாற்றத்தினை கொண்டு வரும்.

விலையை தூண்டும் தூண்டுகோல்கள்

விலையை தூண்டும் தூண்டுகோல்கள்

இதே தங்கம் விலையானது வட்டி விகிதங்கள் குறைவு, பொருளாதார தூண்டுதல் மற்றும் பொருளாதாரம் குறித்த நிச்சமயற்ற தன்மை மற்றும் வரவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் ஆகியவை தங்கம் விலையினை அதிகரிக்கும் தூண்டுகோல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

கோப்பர்னிக் குளோபல் முதலீட்டாளர்களின் ஆராய்ச்சி இயக்குனர் அலிசா கோர்கரன், மார்கெட் வாட்சின் மைரா பி சைபோங்கிடம் பொருட்களின் குறுகிய கால ஏற்ற இறக்கம் ஆபத்துக்கு பதிலாக ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளனர். கோர்கரன் தங்கமானது இன்னும் ஏற்றம் காண இது ஒரு காரணமாக அமையும். இது டாலரில் அவுன்ஸூக்கு 5000 டாலர் வரை கூட செல்லக்கூடும்.

சுரங்க நிறுவனங்கள் பாதிப்பு

சுரங்க நிறுவனங்கள் பாதிப்பு

தங்கம் விலை இன்று அதிகரிக்காவிட்டாலும், சுரங்க நிறுவனங்கள் இன்னும் தலைகீழாக உள்ளன. ஏனெனில் அவை 2011ல் இருந்ததை விட 50 - 60% குறைவாகவே வர்த்தகம் செய்கின்றன. மற்ற ஆய்வாளர்கள் தங்கத்தின் விலையானது நடுத்தர காலத்தில் அவுன்ஸூக்கு 3000 டாலர் மற்றும் 5000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எதிர்பார்க்கின்றது. இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன் தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்

டாலரின் மதிப்பு வீழ்ச்சி, ஊக்குவிப்பு தொகைகள் தொடர்ந்து தங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் என்றும் சாக்ஸோ வங்கியின் தலைவரான ஜான் ஹார்டி கூறியுள்ளார். குறுகிய காலத்தில் கச்சா எண்ணெய் தேவையானது மீள்ச்சி காணுமா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது குறைந்தது பேரலுக்கு 10 டாலர்களாவது அதிகமாக இருக்கும் என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold investors have a good chance in future

Gold and crude oil prices may increase in future.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X