தங்கம் விலை படிப்படியாக சரிவு.. இப்போது வாங்குவது சரியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் மூலம் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது, இதனால் மக்கள் தங்க நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 45,380 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 45,240 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

 

குட் நியூஸ்: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

தங்கம் விலையில் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து சரிந்து வருவது பெரிய லாபத்தை அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கச் சந்தை எடுக்க உள்ள மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MCX சந்தை விலை

MCX சந்தை விலை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.13 சதவீதம் வரையில் சரிந்து 45,995 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை 1.43 சதவீதம் வரையில் சரிந்து 59,920 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. தங்கத்தை விடவும் வெள்ளியின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தையின் நேற்றைய வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,757.7 டாலரில் இருந்து 1,750.85 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதற்கிடையில் இந்த விலை அளவீடுகள் 1,741.98 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1740 டாலர் வரையில் உயர்வதற்கே போராடி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கப் பெடரல் வங்கி எடுத்துள்ள முடிவுகள் தான்.

அமெரிக்கப் பெடரல் வங்கி
 

அமெரிக்கப் பெடரல் வங்கி

அமெரிக்காவின் சென்டரல் வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி தன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, டாலர் மதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பத்திர கொள்முதல்

பத்திர கொள்முதல்

ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது அமெரிக்கச் சந்தையில் மட்டுல்லாமல் சர்வதேச சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பெடரல் ரிசர்வ் வாங்கும் பத்திர அளவுகளை இனி ஒவ்வொரு மாதமும் குறைக்க உள்ளது.

டிசம்பர் முதல்

டிசம்பர் முதல்

பெடரல் ரிசர்வ் டிசம்பர்-க்கு பின்பு பத்திர கொள்முதல் அளவை குறைக்கத் திட்டமிட்ட நிலையில், தற்போது நவம்பர் மாதம் முதல் பத்திரம் வாங்குவதைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இதோடு அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி அந்நாட்டுப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்ட காலக்கட்டத்திற்கு முன்பாகவே தனது வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மொத்த முதலீட்டு சந்தையையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

சென்னை - ₹43,570

மும்பை - ரூ. 45,240

டெல்லி - ரூ. 43,350

கொல்கத்தா - ரூ. 45,900

பெங்களூரு - ரூ. 43,200

ஹைதராபாத் - ரூ. 43,200

கேரளா - ரூ. 43,200

புனே - ரூ. 44,440

வதோதரா - ரூ. 44,860

அகமதாபாத் - ரூ. 44,480

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்

சென்னை - ரூ. 46,530

மும்பை - ரூ. 46,240

டெல்லி - ரூ. 49,480

கொல்கத்தா - ரூ. 48,600

பெங்களூரு - ரூ. 47,130

ஹைதராபாத் - ரூ. 47,130

கேரளா - ரூ. 47,130

புனே - ரூ. 47,580

வதோதரா - ரூ. 47,900

அகமதாபாத் - ரூ. 47,710

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் 1 கிலோ வெள்ளி விலை நிலவரம்

சென்னை - ரூ. 64100.00

மும்பை - ரூ. 59900.00

டெல்லி - ரூ. 59900.00

கொல்கத்தா - ரூ. 59900.00

பெங்களூரு - ரூ. 59900.00

ஹைதராபாத் - ரூ. 64100.00

கேரளா - ரூ. 64100.00

புனே - ரூ. 59900.00

வதோதரா - ரூ. 59900.00

அகமதாபாத் - ரூ. 59900.00

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price below 10,100 rupees from historic highest level: Gold price on 25th September 2021

Gold price below 10,100 rupees from historic highest level: Gold price on 25th September 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X