அசுர ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை! எப்படி விலை ஏற்றம் கண்டது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை (Gold Price) சாதாரணமாக அவ்வப் போது விலை ஏற்றம் கண்டு வந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது.

இப்போது எல்லாம், தினம் தோறும் ஏற்றம் காணும் நிலைக்கு வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை அசுரத்தனமாக விலை அதிகரித்து இருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை (Gold Price), என்ன விலையில் இருந்து என்ன விலைக்கு, எந்த கால கட்டங்களில் அதிகரித்து இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். முதலில் 2016-ம் ஆண்டு சென்னை ஆபரணத் தங்க விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

2016-ல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
 

2016-ல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

கடந்த 2016 பிப்ரவரி மாத காலத்தில் தங்கம் ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டது. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 28,149-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 2,814 ரூபாய். 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 26,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராம் விலை 2,632 ரூபாய்.

2017-ம் ஆண்டில் சென்னையில் தங்கம் விலை

2017-ம் ஆண்டில் சென்னையில் தங்கம் விலை

ஜனவரி 2017-ல் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 28,760 ரூபாய்க்கு (1 கிராம் = 2,876) விற்கப்பட்டது.

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம், சென்னையில் 27,490 ரூபாய்க்கு (1 கிராம் 2,749) விற்பனை ஆனது. ஆக 2016 விலை உடன், 2017-ம் ஆண்டு விலையை ஒப்பிட்டால் 2.17 % தான் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்னையில்  2018-ம் ஆண்டு ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 2018-ம் ஆண்டு ஆபரணத் தங்கம் விலை நிலவரம்

2018 ஜனவரியில் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 29,450 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 1 கிராம் விலை 2,945 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 28,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 2,805 ரூபாய். 2016 விலை உடன் ஒப்பிட்டால் மொத்தமாக 5 சதவிகிதம் கூட தங்கம் விலை ஏற்றம் காணவில்லை.

விலை ஏற்றம் காணத் தொடங்கிய 2019
 

விலை ஏற்றம் காணத் தொடங்கிய 2019

நம் சிங்காரச் சென்னையில், கடந்த ஜனவரி 01, 2019 அன்று 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 2019 ஜனவரியின் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்க விலையை, 2016 ஜனவரி விலையான 28,149 ரூபாயுடன் ஒப்பிட்டால் 12.44 சதவிகித விலை ஏற்றம் கண்டு இருப்பது தெரிய வருகிறது. ஜனவரி 2018 விலை உடன், ஜனவரி 2019 விலை ஒப்பிட்டால் கூட 7.47 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

2019 பிப்ரவரியில் இன்னொரு உச்சம்

2019 பிப்ரவரியில் இன்னொரு உச்சம்

அதன் பின், 20 பிப்ரவரி 2019 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. ஜனவரி 2016 ஆபரணத் தங்கம் விலை உடன் ஒப்பிட்டால் 24.8 % விலை ஏற்றம். ஜனவரி 2019 விலை உடன் ஒப்பிட்டால் 11 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

40,000 தொட்ட சென்னை ஆபரணத் தங்கம் விலை

40,000 தொட்ட சென்னை ஆபரணத் தங்கம் விலை

ஒவ்வொரு ஆண்டிலும், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தான், இந்தியாவில் பண்டிகைகள் நிறைய கொண்டாடப்படும். அப்போது தன்னிச்சையாக தங்கம் வெள்ளி விலையும் ஏறத் தொடங்கும். இப்படியாக கடந்த செப்டம்பர் 04, 2019 அன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,070 ரூபாய்க்கு விற்பனை ஆகத் தொடங்கியது. அப்போதைக்கு இது ஒரு புதிய உச்சம்.

முரட்டு விலை ஏற்றம்

முரட்டு விலை ஏற்றம்

செப்டம்பர் 2019 விலையை, ஜனவரி 2016 விலை (28,149) உடன் ஒப்பிட்டால் 45.9 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல செப் 2019 விலையை பிப்ரவரி 2019 விலையான 35,130 ரூபாயுடன் ஒப்பிட்டால் 16.91 % விலை அதிகரித்து இருக்கிறது.

உலக பெரும் தொற்று நோய்

உலக பெரும் தொற்று நோய்

மார்ச் 2020 மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸை, Pandemic (பெரும் தொற்று நோய்) என அறிவித்தது. இதன் பிறகு தான் தங்கம் விலை தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியது. 04 மார்ச் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 45,310 ரூபாயைத் தொட்டது. இது செப்டம்பர் 2019 விலையான 41,070 ரூபாயை விட 10.32 % விலை அதிகம்.

ஜூன் 2020-ல் செம லாபம்

ஜூன் 2020-ல் செம லாபம்

ஜூன் 2020 விலையான 50,270 ரூபாயை, ஜனவரி 2016 விலையான 28,149 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 78.59 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த 50,270 ரூபாயை, 4 மார்ச் 2020 விலையான 45,310 ரூபாயுடன் ஒப்பிட்டால் 3 மாதத்துக்குள் 10.95 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஒரே மாதத்தில் மீண்டும் 10 % விலை ஏற்றம்

ஒரே மாதத்தில் மீண்டும் 10 % விலை ஏற்றம்

29 ஜூலை 2020 அன்று, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, மீண்டும் சுமாராக 5,000 ரூபாய் விலை அதிகரித்து 55,310 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த விலையை ஜனவரி 2016 28,149 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 96.49 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் ஜூன் 2020 விலையான 50,270 ரூபாய் உடன் ஒப்பிட்டால் மீண்டும் 10.03 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

கிட்டத்தட்ட 60,000 ரூபாய்

கிட்டத்தட்ட 60,000 ரூபாய்

சிங்காரச் சென்னையில், கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை, இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த விலையை ஜனவரி 2016 விலையான 28,149 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 110 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

எந்த ஆண்டில் எவ்வளவு விலை ஏற்றம்

எந்த ஆண்டில் எவ்வளவு விலை ஏற்றம்

2017 முதல் 18 வரையான ஒரு ஆண்டு காலத்தில் ஆபரணத் தங்கம் விலை சுமாராக 2.17 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

2018 முதல் 2019 வரையான ஒரு ஆண்டு காலத்தில் ஆபரணத் தங்கம் விலை 2.4 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஜனவரி 2016-ல் 28,149 ரூபாய்க்கு விற்பனை ஆன ஆபரணத் தங்கம் விலை, ஜனவரி 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக இந்த 3 வருட காலத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒட்டு மொத்தமாகவே 12.44 % தான் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

அசுரத் தனமான விலை ஏற்றம் கண்ட 2019

அசுரத் தனமான விலை ஏற்றம் கண்ட 2019

01 ஜனவரி 2019 அன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆகத் தொடங்கியது.

31 டிசம்பர் 2019 அன்று 40,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் 28.47 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

கொரோனா வைரஸால் விண்ணைத் தொட்ட தங்கம் விலை

கொரோனா வைரஸால் விண்ணைத் தொட்ட தங்கம் விலை

சென்னையில், 01 ஜனவரி 2020 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 40,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 07 ஆகஸ்ட் 2020 அன்று வரலாற்று உச்சமாக 59,130 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக இந்த 8 மாத காலத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை 45.10 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணங்கள் என்ன?

ஆபரணத் தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணங்கள் என்ன?

1. 2019-ம் ஆண்டில் இருந்து தடுமாறும் உலக & இந்திய பொருளாதாரம்.

2. சரிந்து வரும் வட்டி விகிதங்கள்.

3. சரிந்து வரும் கடன் பத்திரங்கள் வருவாய்.

4. பங்குச் சந்தை சரிவு & ரெசசன் பயம்.

5. தங்கத்தின் அதிகரித்த முதலீடுகள்...

என பல மேக்ரோ பொருளாதார காரணிகள், ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணங்களாக இருந்து இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price in Chennai has seen a super surge in the last two years

Gold price in Chennai has seen a super growth. We have give the respective gold price data to explain the gold price surge.
Story first published: Monday, September 21, 2020, 9:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?