Gold update: கிட்டதட்ட ரூ.8400 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பினை இழந்து விட்டோமோ என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது.

 

எனினும் இன்னும் தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலையானது இன்னும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு கிட்டதட்ட 8,400 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.

இது குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? அடுத்தடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணத் தொடங்கிய தங்கம் விலையானது, முடிவில் சற்று குறைந்திருந்தாலும், மொத்தமாக ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று 1796.40 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1789.30 டாலர்களை தொட்டு பின் ஏற்றம் கண்டது. வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1829.30 டாலர்களை தொட்டு, 1817.35 டாலர்களாவும் முடிவுற்றது. இது கிட்டதட்ட 21 டாலர்கள் அதிகரித்துள்ளது.

ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை

ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அதிகரித்து இருந்தாலும், ஒரே ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலையானது வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது 1780 - 1835 டாலர்களுக்கு உள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இது நீண்டகால நோக்கில் 1835 டாலர்களை உடைத்து மேலே சென்றால், 1900 - 1910 டாலர்கள் என்ற லெவலுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்
 

பணவீக்கம் அதிகரிக்கலாம்

ஏற்கனவே பணவீக்கம் என்பது உச்சம் தொட்டு வரும் நிலையில், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரன்சிகள் மதிப்பு

கரன்சிகள் மதிப்பு

சர்வதேச அளவிலான கரன்சிகளின் மதிப்பானது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் சரிவினைக் காணலாம். ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பெரும் பிரச்சனையே பணவீக்கம் தான். அங்கு வரலாறு காணாத அளவு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இதே இந்தியாவில் ரூபாயின் மதிப்பானது சமீப காலமாக 74 - 76 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்றைய காலகட்டத்தில் திரவத் தங்கத்தின் (கச்சா எண்ணெய்) விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 100 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆக இது அதிகரிக்கும் நிச்சயம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

எனினும் மறுபுறம் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்பதும் கவனிக்கதக்கது. இது நடப்பு ஆண்டில் மூன்று முறை அதிகரிக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை மாற்றம் செய்தால் அது, தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comex தங்கம்

Comex தங்கம்

கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணத் தொடங்கிய தங்கம் விலையானது, முடிவில் சற்று குறைந்திருந்தாலும், மொத்தமாக ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று 1796.40 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1789.30 டாலர்களை தொட்டு பின் ஏற்றம் கண்டது. வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1829.30 டாலர்களை தொட்டு, 1817.35 டாலர்களாவும் முடிவுற்றது. இது கிட்டதட்ட 21 டாலர்கள் அதிகரித்துள்ளது.

Comex வெள்ளி

Comex வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சற்று சரிவில் முடிவடைந்தது. திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 22.380 டாலர்களாக தொடங்கிய வெள்ளி விலை, அன்றே குறைந்தபட்சமாக 22.275 டாலர்களையும் தொட்டது. வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 23.370 டாலர்களையும் தொட்டது. எனினும் முடிவில் சற்று குறைந்து, 22.985 டாலர்களாகவும் முடிவுற்றது.

MCX தங்கம்

MCX தங்கம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது வாரத் தொடக்கத்தில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், வார முடிவில் சற்று குறைந்து முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 47,394 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே குறைந்தபட்சமாக 47,301 ரூபாயினையும் தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 47,993 ரூபாயினை எட்டியது. எனினும் முடிவில் சற்று குறைந்து 47,778 ரூபாயாகவும் முடிவடைந்தது. இது கடந்த வாரத்தில் மட்டும் 384 ரூபாய் அதிகரித்துள்ளது.

MCX வெள்ளி

MCX வெள்ளி

வெள்ளியின் விலையானது வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கியிருந்தாலும், பின்னர் நல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 60,404 ரூபாயாக தொடங்கியது. அன்றே குறைந்தபட்சமாக 60,251 ரூபாயினையும் தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 62,385 ரூபாயினை தொட்டது. இதே முடிவில் 61,603 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது ஒரே வாரத்தில் 1199 ருபாய் அதிகரித்துள்ளது. எனினும் வரலாற்று உச்சத்தில் இருந்து 16,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் தான் காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் நிலவரம்

ஆபரண தங்கம் நிலவரம்

இன்று ஆபரணத் தங்கத்தின் வியோலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 4534 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 36,272 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 10 கிராமுக்கு 45,340 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 35,776 ரூபாயாகவும் இருந்தது. இன்று 36,272 ரூபாயாக உள்ளது. இது ஒரு வாரத்தில் சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்துள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4944 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,440 ரூபாயாகவும், கிலோவுக்கு 49,440 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் 48,790 ரூபாயாகவும் உள்ளது. ஒரே வாரத்தில் 650 ரூபாய் அதிகரித்து காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

இன்று ஆபரண வெள்ளியின் விலையானது மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 65.50 ரூபாயாக உள்ளது. இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,500 ரூபாயாகவும் உள்ளது. இது நடப்பு வாரத் தொடக்கத்தில் 64,300 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரே வாரத்தில் கிலோவுக்கு 1200 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

இனி என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கும். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே ஆபரணம் தங்கம் மற்றும் வெள்ளியினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 16th January 2021: gold prices Increases but fall nearly Rs.8400 from lifetime high

gold price on 16th January 2021: gold prices Increases but fall nearly Rs.8400 from lifetime high/Gold update: கிட்டதட்ட ரூ.8400 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X