தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது ஆச்சரியப்படுத்தும் விதமாக தொடர்ந்து மீண்டும் சர்வதேச சந்தையில் சரிவினை காணத் தொடங்கியுள்ளது.

 

எனினும் இந்த சரிவு தொடருமா? இன்னும் குறையுமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையலாம்? இந்த இடத்தில் வாங்காலாமா? வேண்டாமா?

சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து வீழ்ச்சி காணும் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

சர்பிரைஸ் தான்

சர்பிரைஸ் தான்

முதலில் இது தங்க ஆர்வலர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த நல்ல சான்ஸ் எனலாம். ஏனெனில் கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே காணப்பட்டது. ஆக குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பே கிடைக்கவில்லை எனலாம். ஆக தற்போது இரண்டாவது அமர்வாக தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைய ஆரம்பித்திருப்பது, இந்திய சந்தையிலும் எதிரொலிக்கலாம். இது தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவே அமையலாம்.

தற்போதைய நிலவரம் இது தான்?

தற்போதைய நிலவரம் இது தான்?

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும் சற்று குறைந்துள்ளது. இது தங்க பத்திரத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது டாலரின் மதிப்பு வலுவடைய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

விரைவில் வட்டி அதிகரிக்கலாம்
 

விரைவில் வட்டி அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பத்திர சந்தையானது டாலரினை ஊக்குவித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஊக்குவிக்கிறது. ஆக அடுத்த சில மாதங்களில் வட்டி விகிதம் என்பது நிச்சயம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 வருட உச்சத்தில் பத்திர சந்தை

2 வருட உச்சத்தில் பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது தற்போது 2 வருட உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவிலான பங்கு சந்தையில் உள்ள முதலீடுகள் கூட வெளியேறத் தொடங்கியுள்ளன. இதோடு வட்டியில்லா முதலீடான தங்கத்திலும், இது முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

அடுத்த கூட்டம்

அடுத்த கூட்டம்

இதற்கிடையில் நிலவி வரும் பணவீக்கத்தின் அச்சத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், பெரியளவிலான சரிவினைக் காணவில்லை. வரவிருக்கும் ஜனவரி 25 - 26ம் தேதிகளில் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8200 சரிவில் தங்கம் விலை

ரூ.8200 சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 8,200 ரூபாய்க்கும் மேலாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் 48,000 ரூபாய்க்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. அடுத்த முக்கிய சபோர்ட் லெவலாக 47,300 ரூபாய் பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 48,300 ரூபாயாக பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் டாலர்

அதிகரித்து வரும் டாலர்

தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பானது, தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இது மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கும்போது இன்னும் தொடர்ந்து முதலீடுகள் குறைந்தால் என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதனால் தான் முதலீட்டாளர்கள் பெரியளவிலான முதலீடுகளை தற்போது தவிர்த்து வருகின்றனர்.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

பல காரணங்கள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வரும் ஓமிக்ரான் தாக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவளிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிந்தாலும், ஓமிக்ரானால் அது பெரியளவில் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1811.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

 

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.438 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று கீழாக காணப்படுகின்றது. அதே நேரம் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 47,964 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை இதுவரை உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 69 ரூபாய் அதிகரித்து, 63,111 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் இதுவரையில் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 11 ரூபாய் அதிகரித்து, 4,543 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 36,256 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 4,956 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 39,536 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.50 ரூபாய் அதிகரித்து, 67.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 673 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1500 ரூபாய் அதிகரித்து, 67,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 19th January 2021: gold prices fall slightly in COMEX

gold price on 19th January 2021: gold prices fall slightly/gold price on 19th January 2021: gold prices fall slightly
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X