சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு சொல்வதென்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் மிஸ் செய்துவிட்டோமோ என்று என்னும் அளவுக்கு கடந்த அமர்வில் ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை. இந்த நிலையில் இன்று புராபிட் புக்கிங் செய்யும் விதமாக முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது.

 

இதற்கிடையில் மீண்டும் ஒரு வாங்க வாய்ப்பு கிடைக்குமா? அதுவும் குறைந்த விலையில் கிடைக்குமா? தற்போது குறைந்துள்ள தங்கம் விலையானது மேலும் குறையுமா?

அப்படி குறைந்தால் எவ்வளவு குறையலாம்? இந்த இடத்தில் வாங்காலாமா? வேண்டாமா? சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீடுகள்.. வீழ்ச்சி கண்டு வரும் சென்செக்ஸ், நிஃப்டி..!

2 மாத உச்சம்

2 மாத உச்சம்

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 1812.90 டாலர்களாக தொடங்கிய நிலையில், உச்ச விலையானது 1843.90 டாலர்களை தொட்டது. முடிவில் 1843.20 டாலராகவும் முடிவுற்றது. ஒரே நாளில் 30 டாலர்களுக்கும் மேலாக ஏற்றம் கண்டது. இந்த நிலையில் தான் இன்று புராபிட் புக்கிங் செய்யும் விதமாக தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியும் வருகின்றது. எனினும் மற்ற முன்னணி நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பானது அதனை தடுக்கின்றது.

லண்டன், ஜெர்மனியின் பணவீக்கம்
 

லண்டன், ஜெர்மனியின் பணவீக்கம்

குறிப்பாக அமெரிக்காவின் பணவீக்க விகிதம் அதிகரித்த நிலையில் தான், அமெரிக்காவின் மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் பணவீக்க விகிதமும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஜோ பைடன் மத்திய வங்கிக்கு அழைப்பு

ஜோ பைடன் மத்திய வங்கிக்கு அழைப்பு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க, நடவடிக்கை எடுக்க மத்திய வங்கிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ஐரோப்பிய மண்டல பணவீக்கம் மற்றும் அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்தாக தரவு, வீடு விற்பனை குறித்தான தரவுகளும் வெளியாகவுள்ளன. இதுவும் தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.

அரசியல் பதற்றம்

அரசியல் பதற்றம்

அமெரிக்கா சீனா இடையேயான அரசியல் பதற்றமானது சற்றே குறைந்துள்ள நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்யா மேலும் உக்ரைனுக்குள் நுழைந்தால், பொருளாதார தடையை விதிப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.இது அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பதற்றத்தினை அதிகரித்துள்ளது.இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

இதற்கிடையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் ஜனவரி 25 - 26ம் தேதிகளில் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.7800 சரிவில் தங்கம் விலை

ரூ.7800 சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 7,800 ரூபாய்க்கும் மேலாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் 48,350 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதன் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,700 ரூபாயாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் 48,000 ரூபாயாகும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.55 டாலர்கள் குறைந்து, 1839.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. அதே நேரம் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.223 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. அதே நேரம் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 48,340 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை இதுவரை உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 64,525 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 4,581 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 36,648 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து, 5000 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, 40000 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.50 ரூபாய் அதிகரித்து, 68.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 688 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1500 ரூபாய் அதிகரித்து, 68,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் இந்திய சந்தையில் சற்று வலுவாகவே காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 20th January 2021: gold prices fall slightly in COMEX and MCX

gold price on 20th January 2021: gold prices fall slightly in COMEX and MCX/ சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு சொல்வதென்ன..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X