பெரும் ஏமாற்றம்.. எகிறி வரும் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது பெரும் ஏமாற்றத்தினை கொடுக்கும் விதமாக, சர்வதேச சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

 

இது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது டாலரின் மதிப்பில் ஊக்கத்தினை அளிக்கும். இதனால் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் பெரியளவில் தாக்கம் இருக்கலாம் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால் அப்படி ஏதும் நிகழ்வில்லை. மாறாக சரிவில் இருந்த தங்கம் விலையானது, இன்று கேப் அப் ஆகி மீண்டும் 1900 டாலர்கள் என்ற லெவலையும் உடைத்துக் காட்டியுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிவு.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

வலுவிழந்த டாலர்

வலுவிழந்த டாலர்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, சற்று வலுவிழந்த நிலையில், தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள போதிலும் வந்துள்ளது.

விலையேற்றத்திற்கு காரணம்

விலையேற்றத்திற்கு காரணம்

அமெரிக்கா மத்திய வங்கியானது மீண்டும் வரவிருக்கும் நாணயக் கொள்கை கூட்டத்தில் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என்று உறுதி செய்ததையடுத்து, டாலர் மதிப்பானது சற்றே வலுவிழந்து காணப்படுகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

டாலர் மீதான அழுத்தம்
 

டாலர் மீதான அழுத்தம்

சீனாவில் தற்போது வரையிலும் கொரோனாவின் தாக்கம் என்பது உச்சம் தொட்டுள்ள நிலையில், பொருளதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன், 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து விலக்க நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் தற்போது மறுபரிசீலனை செய்ய அனுமதித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.

பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவு

பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவு

அமெரிக்காவில் நாளை வெளியாகவிருக்கும் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவானது மேற்கொண்டு தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். இது தவிர வேலையின்மை நலன், பேங்க் ஆப் இங்கிலாந்து மத்திய வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளன.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது மேலும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாகவே நீடித்துக் கொண்டுள்ளது.இன்று வரையிலும் சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது முதல் காலாண்டில் 1.4% சரிவினைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் என்பது சரிவினைக் கண்டிருந்தாலும், நுகர்வோர் செலவினங்கள், முதலீடுகள், வேலை வாய்ப்புகள் என பல காரணிகள் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக வேலையின்மை குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து வரவிருக்கும் அமர்வுகளில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

நிலவி வரும் பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், தற்போது வரையில் பணவீக்கத்தினை தூண்டும் காரணிகள் என்பது மாறவில்லை. ஆக இது இன்னும் சில காலங்களுக்கு தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகளை, ரஷ்யா மீது விதித்து வருகின்றது. அடுத்த ஆறு மாதத்திற்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையினை மேலும் ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்ன், 5 மணி நேர கேண்டிலில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.ஃபண்டமெண்டல் காரணிகள் பலவும் தங்கத்திற்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது பலத்த ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 31.98 டாலர்கள் அதிகரித்து, 1900.59 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 3.32% அதிகரித்து, அவுன்ஸூக்கு 23.145 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 650 ரூபாய் அதிகரித்து, 51,260 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இந்று நடப்பு காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், ஜூலை காண்டிராக்டில் தற்போது கிலோவுக்கு 1736 ரூபாய் அதிகரித்து, 63,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது இந்திய சந்தையில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள, ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 4864 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து, 38,912 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 74 ரூபாய் அதிகரித்து, 5306 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 42,448 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 740 ரூபாய் அதிகரித்து, 53,060 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 1.30 ரூபாய் அதிகரித்து, 68.30 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 683 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1300 ரூபாய் அதிகரித்து, 68,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கி வைக்கலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on May 5th, 2022: gold prices turns positive amid global cues

gold price on May 5th, 2022: gold prices turns positive amid global cues/பெரும் ஏமாற்றம்.. எகிறி வரும் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X