பலத்த சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இன்றும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

 

குறிப்பாக இந்திய கமாடிட்டி சந்தையில் மட்டும் கடந்த அமர்வில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 500 ரூபாய்க்கும் மேலாக சரிவினைக் கண்டது. அதே போல வெள்ளியின் விலையும் சரிவிலேயே காணப்பட்டது.

பலவீனமான பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.இது தங்க வர்த்தகர்களுக்கும், நகை பிரியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.

ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன!

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

தொடர்ச்சியாக கடந்த 2 அமர்வுகளாக தங்கம் விலை சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போதும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது இன்னும் சற்று வீழ்ச்சி காணும் விதமாக காணப்படுகின்றது. ஆக இது முதலீட்டாளார்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். .

முக்கிய லெவல் உடைப்பு

முக்கிய லெவல் உடைப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களையும் தங்கம் உடைத்துக் காட்டியுள்ளது. குறிப்பாக கடந்த அமர்வில் 1793.70 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 1798.50 டாலர்களாக முடிவுற்றது. அதோடு இன்று தொடக்கத்திலும் 1797.55 டாலரகளாகவே காணப்படுகின்றது. ஆக முக்கிய லெவலை உடைத்துக் காட்டியுள்ள நிலையில், சந்தையானது இன்னும் சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
 

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. வார கேண்டில் பேட்டர்னிலும் கடந்த வார குறைந்தபட்ச விலையினை உடைத்துக் காட்டியுள்ளது. இதே இண்ட்ராடே கேண்டில்களும் சரிவினைக் காணலாம் என்பதை போலவே காணப்படுகின்றன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது கடந்த சில அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் சற்று அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு சற்று வலுவடைந்து காணப்படும் நிலையில், அதுவும் தங்கம் விலையில் சற்று அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் பங்கு சந்தைகள், தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவானது இதனால் தடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில், மற்ற இன்ட்ராடே கேண்டில்களில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் ஆக மீடியம் டெர்ம் மற்றும் இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். எனினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று குறைந்த விலையாக இருப்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1797.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ள அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே சற்று சறிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.09% அதிகரித்து, 24.395 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 111 ரூபாய் அதிகரித்து, 47,050 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 196 ரூபாய் அதிகரித்து, 64,817 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையை போல, அதே விலையில் இன்று தொடக்கத்திலும் காணப்படுகின்றது. எனினும் உச்சம், குறைந்த விலையினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,452 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 35,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 24 ரூபாய் குறைந்து, 4,857 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து, 38,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0520 பைசா குறைந்து, 69.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 69,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாகவே மாற்றமில்லாமல் இருந்த வெள்ளி விலையானது, இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. எனினும் செல்லிங் ஆப்சனில் லாபம் பார்க்க வாய்ப்பு உண்டு. நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதால் இது ரிஸ்கானது என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on today, 8th September 2021; gold prices today struggle after sharp fall in MCX & Comex

Gold price latest update..Gold price on today, 8th September 2021; gold prices today struggle after sharp fall in MCX & Comex
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X