சூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் போகிற போக்கில் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? கடந்த ஆண்டு உச்சத்தினை தொடுமா? இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன.

 

ஏனெனில் ஒரு புறம் தங்கம் விலை சரிவதற்கு சாதகமான காரணிகள் பலவும் இருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையானது பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய மாற்றங்கள்.. தேசிய ஓய்வூதிய திட்டம்..!

குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் மூன்றாவது அலை என்பது ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொடலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தங்கம் விலைக்கு இது ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் குறித்த கவலை

பொருளாதாரம் குறித்த கவலை

முதல் அலை மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலினால் முடங்கிய பொருளாதாரமே, மீண்டு வராமல் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்யப்போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் பல மதிப்பீட்டு நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை குறைத்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவில் இருந்து, தடுப்பூசி மக்களை காப்பாற்ற எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், மறுபுறம் பல கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்
 

தேவை அதிகரிக்கலாம்

எப்படியிருப்பினும் நாட்டில் கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று ஏறம் கண்டாலும், தொடர்ந்து சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1811.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 1825.90 டாலர்களை தொட்டது. இதெ வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1789.10 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 1801.90 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்திலும் நாளை தொடக்கத்தினை பொறுத்து இருக்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையானது ஏற்றம் கண்டாலும், வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சரிவினையே கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 25.700 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 25.805 டாலர்கள் வரையிலும் சென்றது. புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 24.790 டாலர்களை தொட்டது. எனினும் முடிவில் 25.235 டாலர்களையும் தொட்டது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 48,083 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 48,295 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சம் 47,300 ரூபாயினை தொட்ட நிலையில், முடிவில் 47,534 ரூபாயாக முடிவுற்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8900 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 68,121 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 68,121 ரூபாயாகவே இருந்தது. எனினும் செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 66,286 ரூபாயினை தொட்டு, வெள்ளிக்கிழமையன்று முடிவில் 67,024 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,000 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்பட்டாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 3 நாட்கள் ஏற்றத்திலும், 2 நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. 2 நாட்கள் மாற்றமிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,368 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,500 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,560 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,160 ரூபாயாகும்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 72 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 720 ரூபாயாகவும், கிலோவுக்கு 72000 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 72,900 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 72,000 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலைக்கு சாதகமான காரணிகள்

தங்கம் விலைக்கு சாதகமான காரணிகள்

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் டாலர் மதிப்பு ஏற்றத்தினைக் கண்ட நிலையில் சரிவினைக் கண்டது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றத்தில் உள்ளது. எனினும் டெல்டா வகை கொரோனா பரவல் குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இது வரும் வாரத்தில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை ஆதரவு

தங்கம் விலை ஆதரவு

தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்க சரிவினைக் கண்டு வந்தாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலேயே இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் நாளை தொடங்கவிருக்கும் தினசரி கேண்டில், வார கேண்டில் பேட்டர்ன்களை பொறுத்தே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக பார்க்கும்போதும் தங்கம் விலையின் 50 நாள் மூவிங் ஆவரேஜ் விலையானது 1835 டாலராக உள்ளது. இது விரைவில் சந்தையில் தொடலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. 20 நாள் மூவிங் ஆவ்ரேஜ் ஆனது 1799 டாலராக உள்ளது. இது அடுத்த முக்கிய சப்போர்ட்டாக இருக்கலாம் என்றும், இது நாளை சந்தை தொடக்கத்தினை பொறுத்தே தெரியவரும்.

அடுத்த வார காலண்டர் – டேட்டாக்கள்

அடுத்த வார காலண்டர் – டேட்டாக்கள்

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் பெரிய டேட்டாக்கள் இல்லை. எனினும் செவ்வாய்கிழமைக அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை குறித்தான டேட்டாவும், புதன் கிழமையன்று நுகர்வோர் விலைக் குறியீடு, பெடரல் வங்கி கூட்டம், வியாழக்கிழமையன்று ஃபெடரல் வங்கியின் கூட்டம், அட்வான்ஸ் ஜிடிபி, வெள்ளிக்கிழமையன்று ஜிடிபி டேட்டாவும், முக்கிய pce டேட்டாவும் வெளியாகவுள்ளது.

வரும் வாரத்தில் எப்படியிருக்கும்?

வரும் வாரத்தில் எப்படியிருக்கும்?

தங்கம் விலையானது வரும் வாரத்தில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் ஏற்றம் காணவே பல காரணிகள் சாதகமாக உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price prediction for Next week; is it a right time to buy?

Gold weekly updates.. Gold price prediction for Next week; is it a right time to buy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X