64% லாபம்! தங்கம் விலை எகிறி வந்த கதை! தங்கம் வாங்கியவர்களுக்கு வாழ்வு தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சாமானிய மனிதர்கள், ஏழை மக்களுக்கு எல்லாம் ஏதாவது பணத் தேவை என்றால், சொந்த பந்தங்களிடம் கடன் கேட்பார்கள்.

 

சொந்த பந்தங்களும் கை விரிக்கும் போது, கையில் கிடைக்கும் தங்கம் தான், அவர்களின் பணத் தேவையை பூர்த்தி செய்யும் உற்ற நண்பன்.

முறையாக தங்கத்துக்கு இவ்வளவு ரூபாய் தான் கடன் என கணக்கு பார்க்கும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் தொடங்கி, அடகுக் கடைகள் வரை எங்கு போய் தங்கத்தை வைத்தாலும் பணம் கிடைக்கும்.

வாங்கி இருந்தால் சூப்பார் தான்

வாங்கி இருந்தால் சூப்பார் தான்

அப்படிப்பட்ட தங்கத்தை, 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில், தங்க பத்திரங்களாகவோ அல்லது தங்க நகைகளாகவோ அல்லது தங்க ஃபண்டுகள் (Gold ETF) என எப்படி வாங்கி இருந்தாலும் இன்று கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சூப்பர் லாபத்தைப் பார்த்து இருக்கலாம். அப்படி எவ்வளவு ரூபாய் லாபம் பார்த்து இருக்கலாம் என்று கேட்கிறீர்களா? 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கு பார்ப்போம்.

2019-ல் முதல் விலை ஏற்றம்

2019-ல் முதல் விலை ஏற்றம்

கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் முதல் பெரிய ஏற்றம்.

அடுத்த விலை ஏற்றம்
 

அடுத்த விலை ஏற்றம்

பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை, ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) நிதானமாக ஏற்றம் கண்டு வந்து, செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற புதிய உச்ச விலையில் விற்கப்பட்டது.

மூன்றாவது விலை ஏற்றம்

மூன்றாவது விலை ஏற்றம்

கடந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின், ஜனவரி 02, 2020 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களைக் காணவில்லை. 41,070 ரூபாய்க்குள் தான் விற்பனை ஆனது. ஆனால் கடந்த ஜனவரி 03, 2020 அன்று தான், தங்கம், மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கி, மார்ச் 06, 2020 அன்று 46,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கத்தின் மூன்றாவது பெரிய விலை ஏற்றம்.

தற்போதைய விலை ஏற்றம்

தற்போதைய விலை ஏற்றம்

சரி கொரோனா வைரஸ் பயத்தால் தான் தங்கம் தடாலென விலை ஏற்றம் கண்டது, மீண்டும் சரியத் தொடங்கிறதே என சதோஷப்படுவதற்குள் மீண்டும் தங்கம் விலை டாப் கியர் போட்டு பறக்கத் தொடங்கியது. 06 மார்ச் 2020-க்குப் பிறகு மீண்டும் 27 ஏப்ரல் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 46,900 என புதிய உச்சத்தைத் தொட்டது.

தொடர் விலை ஏற்றம்

தொடர் விலை ஏற்றம்

27 ஏப்ரல் 2020-க்குப் பின், கொரோனா வைரஸ் பயம், பங்குச் சந்தை சரிவு போன்ற பல காரணங்களால், 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 47000, 48000, 49000, 50000, 51000... என தற்போது 52,200 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆக ஒருவர் 24 கேரட் 10 கிராம் தங்கத்தை 31,650 ரூபாய்க்கு வாங்கி இருந்தால், இன்று அவரின் முதலீடு 64 சதவிகிதம் விலை எகிறி இருக்கும். விற்று இருந்தால் 64% லாபம் பார்த்து இருக்கலாம்.

2019 காரணங்கள்

2019 காரணங்கள்

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை, ரியல் எஸ்டேட் & ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் காணப்பட்ட தேக்கம், அமெரிக்க சீன வர்த்தகப் போர், ரெசசன் பயம் என எல்லாம் சேர்ந்து தங்கத்தின் விலையை தாறு மாறாக எகிற வைத்தது. 2019-ம் ஆண்டு மத்தியில் 68.50 ரூபாய் வரை வலுவடைந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 2019-ம் ஆண்டு கடைசியில் 71.70 ரூபாய் வரை வலுவிழந்தது.

2020 காரணங்கள்

2020 காரணங்கள்

கொரோனா வைரஸ் மற்றும் அதைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் அறிவித்த லாக் டவுன், 71.70 ரூபாயாக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 76.10 ரூபாய் வரை வலுவிழந்தது, அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான அரசியல் பதற்றம், சீனா இந்தியாவுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதாரம் செயல்பட முடியாத இக்கட்டான சூழல் போன்ற காரணங்களால் தங்கம் செம ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை ஏறுமா - கணிப்புகள் சொல்வது என்ன

தங்கம் விலை ஏறுமா - கணிப்புகள் சொல்வது என்ன

அடுத்த 12 மாதங்களுக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறது உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ். அதே போல சிட்டி பேங்கும் தங்கம் விலை ஏறும் எனக் கணித்து இருக்கிறது. உலக புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸும் தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனக் கணித்து இருக்கிறார். ஆக தங்கம் விலை ஏற்றம் எங்கு போய் நிற்குமோ அது தங்கத்துக்கு தான் வெளிச்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price surged 64 percent from 2019 it may zoom more

The Chennai gold price has surged 64 percent from 2019. As per the experts opinion and prediction the gold price may surge more and more in the upcoming days.
Story first published: Wednesday, July 22, 2020, 16:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X