பற்றி எரியும் தங்கம் விலை! கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னது பலித்துவிட்டதே! அடுத்த டார்கெட் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் தங்கம் விலை அதிகரிப்பதற்கு, சர்வதேச தங்கம் விலை ஒரு முக்கிய காரணம்.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தைகளில் தற்போது 2,031 டாலரைத் தொட்டு எல்லோரையும் மிரளச் செய்து இருக்கிறது.

16 ஜூலை 2020 அன்று சர்வதேச தங்கம் விலை 1,797 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால் இன்று 2,031 டாலரைத் தொட்டு வர்த்தகமாகி கொண்டு இருக்கிறது என்றால் எப்படி ஒரு அசுர விலை ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தங்கத்தின் விலை ஏற்றக் காரணங்கள்
 

தங்கத்தின் விலை ஏற்றக் காரணங்கள்

1. இன்னும் ஊக்கத் தொகை அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கிறார்கள்.

2. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில், தற்போது இந்தியா முன்னிலை வகிக்கிறது.

3. நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதோடு மட்டும் இல்லாமல், தங்க இ டி எஃப்-களிலும் முதலீடு செய்கிறார்கள்.

இவை எல்லாமே தங்கத்தின் விலை ஏற்றத்தை உறுதி செய்கின்றன.

வட்டி வருமானம் பாதிப்பு

வட்டி வருமானம் பாதிப்பு

மேலை நாடுகள், கொரோனாவில் இருந்து தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த, நிறைய ஊக்கத் தொகை (Stimulus Package) அறிவித்ததால், வட்டி விகிதங்களை தரை தட்டி இருக்கின்றன. சமீபத்தில் தான், அமெரிக்காவின் 5 ஆண்டு கால டிரஷரி பில்லின் வருமானம் வரலாறு காணாத அளவுக்கு சரிவைக் கண்டது, இங்கு குறிப்பிடத்தக்கது.

டிரஷரி பில் வருமானம்

டிரஷரி பில் வருமானம்

அதே போல 10 ஆண்டு கால அமெரிக்க டிரஷரி பில்லின் (US Treasury Bill) வருமானமும் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து இருக்கிறதாம். எனவே, வட்டி வருமானம் கொடுக்காத தங்கத்தில் முதலீடுகள் குவிகின்றன. தங்கம் விலை பற்றி எரிவது போல விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

inflation hedge & currency debasement
 

inflation hedge & currency debasement

தங்கம் வெறுமனே லாபத்தை கொடுக்கும் ஒரு முதலீடாக மட்டும் பார்க்கவில்லை. தங்கள் நாட்டு கரன்ஸி மதிப்பு குறைவதில் (currency debasement) இருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். அதே போல பணவீக்கத்தை சமாளிக்க (inflation hedge) உதவும் ஒரு முதலீடாகவும் பார்க்கிறார்கள். எனவே தங்கத்தில் முதலீடுகள் குவிந்து கொண்டே... போகிறது.

தங்கம் விலை மொமெண்டம்

தங்கம் விலை மொமெண்டம்

உலகில், பல்வேறு காரணங்களால் தங்கம் விலை பாதிக்கப்படலாம். ஆனால் தற்போது ஒட்டு மொத்தமாக தங்கத்தின் விலை மொமெண்டம் பாசிட்டிவாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் இருக்கும் சவால் மற்றும் தங்கத்தில் பணத்தைப் போட முதலீட்டாளர்கள் காட்டும் வலுவான விருப்பம் போன்றவைகளால், தங்கம் விலை மேலும் விலை அதிகரிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். எவ்வளவு அதிகரிக்கும்?

கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

சில வாரங்களுக்கு முன், உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ், தங்கத்தின் விலை 2,000 டாலரைத் தொடலாம் என்றார்கள். இதோ தொட்டுவிட்டதே! அடுத்த 12 மாதங்களுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,300 டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறார்கள். சரி இந்தியாவில் எம் சி எக்ஸில் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எம் சி எக்ஸ் சந்தை

தங்கம் விலை எம் சி எக்ஸ் சந்தை

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை இன்று காலை புதிய உச்சமாக 54,898 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எம் சி எக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை ஏறுவது, ஆபரணத் தங்கம் விலை ஏற்றத்தை உறுதி செய்வதாக இருக்கிறது.

வெள்ளி விலை எம் சி எக்ஸ்

வெள்ளி விலை எம் சி எக்ஸ்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் பிரமாதப்படுத்திக் கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி விலை, இன்று அதிகபட்சமாக 70,195 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், வெள்ளி விலை 75,000 ரூபாயை அசால்டாகத் தொட்டு விடும் போலிருக்கிறதே..! அப்படி என்றால் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன?

ஆபரணத் தங்கம் விலை - சென்னை

ஆபரணத் தங்கம் விலை - சென்னை

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 56,820 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 24 கேரட் 1 பவுனுக்கு 45,456 ரூபாய்க்கு விற்றார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 52,090 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 1 பவுனுக்கு 41,672 ரூபாய்க்கு விற்றார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price surged to $2031 in international market next target $2300 goldman sachs

The international gold price has surged to $2,031. Goldman sachs has revised its gold price prediction to $2,300 in next 12 months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X