எகிறிய தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சமீப வாரங்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்றோடு கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இது நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல நேரமாக பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தங்கம் தனது வேலையை செய்ய ஆரம்பித்துள்ளது.

அதிலும் தங்கத்தில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சர்வதேச சந்தையில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளதாக நேற்றே கூறியிருந்தோம். அதன் எதிரொலியாக தங்கம் விலையானது இன்றும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஏற்றத்திற்கு என்ன காரணம்
 

ஏற்றத்திற்கு என்ன காரணம்

எனினும் இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 7,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்க நல்ல நேரமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது அதிகரிப்பது போல் இருப்பதாலும், குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாலும் தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக, கடந்த சில வாரங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் இன்று தங்கம் விலை எப்படி உள்ளது? நீண்டகால நோக்கில் இனி எப்படி இருக்கும்? விலை குறையுமா? குறையாதா? எவ்வளவு குறையும்? காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக அதிகரித்து வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11.70 டாலர்கள் அதிகரித்து, 1,851.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் முந்தைய

அமர்வில் 1840.20 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1840.15 டாலர்களாக தொடங்கியுள்ளது.

Comex வெள்ளி விலை
 

Comex வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே வெள்ளி விலையானதும் பலமான ஏற்றத்துடன் தான் காணப்படுகிறது. அந்த வகையில் இன்றும் தற்போது கிட்டதட்ட 1% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.183 டாலர்கள் அதிகரித்து, 25.503 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் சர்வதேச சந்தையில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது வலுவான ஏற்றத்தில் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து, 49,193 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலையில் சற்று ஏற்றத்துடனே தங்கம் விலை தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 434 ரூபாய் அதிகரித்து, 66,470 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் மூன்றாவது தினமாக இன்றும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது முந்தைய

அமர்வில் 66,036 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று 66,371 ரூபாயாக ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தடுமாற்றத்தில் டாலர் மதிப்பு

தடுமாற்றத்தில் டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலர் மதிப்பு, சற்று அழுத்தத்தில் உள்ள நிலையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் தங்கம் விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு அமெரிக்காவில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மிகப்பெரிய அளவிலான ஊக்கத்தொகையை எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் டாலரின் மதிப்பில் அழுதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஊக்கத்தொகை பற்றிய எதிர்பார்ப்பு

ஊக்கத்தொகை பற்றிய எதிர்பார்ப்பு

அதோடு அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் எல்லன், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், கொரோனாவினால் மிக மோசமான வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. இதனை மீட்க மிகப்பெரிய அளவில் ஊக்கத்தொகை வெளியிடப்பட வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவியேற்க உள்ள ஜோ பிடன் இது குறித்த முக்கிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங்

பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங்

நாளுக்கு நாள் பணவீக்கம் என்பது உயர்ந்து வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ளன. எனினும் கொரோனாவினால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது பணவீக்கத்தினை அதிகரிக்க தூண்டுகிறது. அதோடு தற்போது நுகர்வு அதிகரித்து வரும் அதேவேளையில் விலை வாசியும் அதிகரித்து வருகின்றது. இதனால் டாலரின் மதிப்பு அழுத்தத்தினை நோக்கி செல்கிறது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், விலை அதிகரித்து வருகின்றது.

பத்திர லாபம் சரிவு

பத்திர லாபம் சரிவு

கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில், அமெரிக்க பத்திரங்களின் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது அப்போது சரிவில் இருந்தது. ஏனெனில் வட்டியில்லா முதலீட்டில் முதலீட்டாளர்கள் அப்போது ஆர்வம் காட்டவில்லை. இதனால் தங்கம் விலையானது அழுத்தத்தினை கண்டது. ஆனால் தற்போது மீண்டும் பத்திர லாபம் சரிய ஆரம்பித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கத்திற்கு ஆதரவாக பல காரணிகள் உள்ள நிலையில், குறைந்தபட்ச விலையில் தங்கத்தினை முதலீட்டாளர்கள் வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு டெக்னிக்கலாக தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாக காணப்படுவதால், தங்கம் விலை சற்று ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம். இதனால் தங்கத்தினை நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price today gain for third day in a row

Gold price updates.. Gold price today gain for third day in a row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?