இன்றும் தங்கம் விலை சரிவு.. வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் பொருளாதாரம் மீண்டும் சரிவு பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

 

இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக தற்போது தங்கம் விலையானது குறைந்தாலும், அது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. 3வது நாளாக தொடர் உயர்வு..!

எனினும் இன்னும் எவ்வளவு குறையும்? இந்த இடத்தில் வாங்கலாமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் தவித்து வருகின்றன. இதற்கிடையில் பாதுகாப்பினை காரணம் காட்டி, மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை முதலீட்டாளர்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் இன்றளவிலும் தங்கம் ஒரு கவர்ச்சிகரமான பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

முதல் கட்டத்தினை விட இரண்டாம் கட்ட பரவலானது மிக மோசமான நிலையில் பரவி வரும் நிலையில், அனுதினமும் தொடர்ந்து பாதிப்பு உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ? தொழில் துறை என்னவாகுமோ? என்ற கவலையும் எழுந்துள்ளது. இதற்கிடையில் இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் பின்னடைவை நோக்கி வந்து கொண்டுள்ளன.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை
 

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.65 டாலர்கள் குறைந்து, 1830.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று அதிகரித்து தொடங்கியிருந்தாலும், தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.57% குறைந்து 27.508 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து, 47,558 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருப்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு 419 ரூபாய் குறைந்து, 71,510 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,500 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 36,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

இதுவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைவாக காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,909 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 39,272 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து, ஒரு நாள் தவிர, மற்ற நாட்கள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டும், மாற்றமில்லாமலும் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 10 பைசா குறைந்து, 75.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 75,900 ரூபாயாகவும் காணப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், இது நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளி விலையினை பொறுத்த வரையில் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இது புராபிட் புக்கிங் தான்

இது புராபிட் புக்கிங் தான்

தங்கம் விலையில் எதிரொலிக்கும் எந்த காரணிகளும் பெரியதாக மாற்றம் காணவில்லை. மாறாக மீடியம் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கம் விலையானது தொடர்ந்து அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலே இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் மீண்டும் அதிகரிக்கும் என்பதற்கான ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அதே போல் இந்திய சந்தையிலும், 48,000 ரூபாயினை தொட்டபிறகு ஒரு கரெக்ஷன் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வந்தது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் அடுத்தடுத்த டார்கெட்

தங்கம் மற்றும் வெள்ளியின் அடுத்தடுத்த டார்கெட்

ரிலீகேர் புரோக்கிங் நிறுவனம், வெள்ளியின் விலையானது 76,000 ரூபாய் வரை மீடியம் டெர்மில் செல்லாம். அப்படி அந்த லெவலில் நிலையாக காணப்பட்டால், அடுத்து 85,000 லெவலை தொடலாம். இதே போல தங்கம் விலையானது 52,000 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லெவலை உடைத்தால் 55,000 ரூபாயினையும், அதன் பிறகு 60,000 ரூபாயினையும் தொடலாம் என்று கணித்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today: gold price falling today, is it right time to buy?

Gold price updates.. Gold price today: gold price falling today, is it right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X